Exclusive: 'என்னோட வாழ்வின் பெஸ்ட் மொமண்ட்' மனம் திறந்த தமிழ் தலைவாஸ் வீரர் செல்வமணி!

தமிழ் தலைவாஸ் அணிக்காக ஆடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வமணி ஏபிபி நாடுவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

Continues below advertisement

ப்ரோ கபடி லீக்:

10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Continues below advertisement

இதில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் உ.பி யோத்தாஸ் அணியை 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்து வெற்றி பெற்றது. இதனிடைய அந்த அணியில் விளையாடும் தமிழக வீரரான செல்வமணி ஏபிபி நாடுவிடம் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதை இங்கு பார்ப்போம்.

நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்:

கேள்வி: இந்தியாவுல கிரிக்கெட்டுக்கு தானே மவுசும் ரசிகர்களும் அதிகம், நீங்க ஏன் கபடிய செலக்ட் செஞ்சீங்க, கபடி விளையாட தனிக் காரணம் எதாவது இருக்கா?

பதில்: “ நானும் முதலில் கிரிக்கெட் வீரர் தான். பின்னர் தான் கபடி விளையாட ஆரம்பித்தேன். நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் எங்களால் பேட்டு பந்து வாங்க முடியாது அதனால தான் நான் கபடி விளையாடுவதை தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால் கபடி விளையாடுவதற்கு எந்த பொருளும் வாங்க தேவையில்லை” என்றார். 

வாழ்வின் பெஸ்ட் மொமண்ட்:

கேள்வி: இதுவரையிலான உங்க கபடி வாழ்க்கையில் நீங்க சந்திச்ச பெரிய காயம் எது? எப்படி ஆச்சு, அதுல இருந்து குணமாகி வர எவ்வளவு காலம் எடுத்துச்சு? 

பதில்: “என்னுடைய கபடி வாழ்க்கையில் பெரிய காயம் என்றால் அது ஜெய்ப்பூர் அணிக்கு எதிராக விளையாடிய போது ஏற்பட்டது தான். அதில் இருந்து மீண்டு வருவதற்கு எனக்கு 8 மாதங்கள் தேவைப்பட்டது. அந்த நேரங்களில் நம்முடைய மனநிலை மிகவும் பாதிக்கப்படும்” என்று கூறினார். 

கேள்வி: தமிழ் தலைவாஸ் அணி உங்களுக்கு இதுவரைக்கும் கொடுத்த பெஸ்ட் மொமண்ட் எது? 

பதில்: “ என்னை தமிழ் தலைவாஸ் அணியில் எடுத்ததே பெஸ்ட் மொமண்ட் தான்” என்றார்.

கேள்வி: கபடி விளையாட்டு தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தனும் அப்படினு நீங்க நெனச்சா எந்த மாதிரியான கவனம் கொடுக்கனும்?

பதில்: " எல்லா மாவட்டங்களிலும் கபடிக்கென அகாடமிகள் உருவாக்கப்பட்டால் நன்றாக இருக்கும். அதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேலைகளை வழங்கினால் நன்றாக இருக்கும்" என்றார்.

கேள்வி: உங்க சின்ன வயசு கோச் யார்? அவரை பத்தி கொஞ்சம் சொல்லுங்க?

பதில்: "தனிப்பட்ட முறையில் எனக்கு கோச் என்று யாரும் கிடையாது" என்று கூறினார்.

 

 

 

மேலும் படிக்க: IND vs AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டி.. விராட் கோலி விலகல்! ட்ராவிட் சொன்ன காரணம்!

 

மேலும் படிக்க: Mohammed Shami: அர்ஜூனா விருது! முன்னாள் மனைவிக்கு முகமது ஷமி கொடுத்த பதிலடி - நெட்டிசன்கள் கருத்து

 

Continues below advertisement
Sponsored Links by Taboola