ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 115வது போட்டியில் இன்று (பிப்ரவரி 11) தமிழ் தலைவாஸ் அணி, பலமிக்க  புனேரி பல்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 08:00 மணிக்கு தொடங்குகிறது.


இரு அணிகளும் கடந்த போட்டிகளில் எப்படி?


கடந்த பிப்ரவரி 6 ம் தேதி நடைபெற்ற உபி யோதாஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் இந்த போட்டியில் இன்று களமிறங்குகிறது. கடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 32-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் அணியின் எட்டாவது வெற்றியாகும்.


அதேபோல், கடந்த பிப்ரவரி 7 ம் தேதி நடைபெற்ற பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 40-31 என்ற கணக்கில் புனேரி பல்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.


தமிழ் தலைவாஸ் vs புனேரி பல்டன்ஸ் அணிகளி இதுவரை நேருக்குநேர்: 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தமிழ் தலைவாஸ் அணியும், புனேரி பல்டன்ஸ் அணியும் இதுவரை 10 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. அதில், அதிகபட்சமாக புனேரி பல்டன்ஸ் அணி 5 முறையும், தமிழ் தலைவாஸ் அணி 3 முறையும் வெற்றிபெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் டையில் முடிந்துள்ளது. 


ப்ரோ கபடி லீக் சீசன் 10ல் தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்டன் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டியில் புனேரி புல்டன்ஸ் அணி 29-26 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. 


ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி, 8ல் வெற்றி பெற்று 11ல் தோல்வி அடைந்துள்ளது. இதன்மூலம், 45 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. அதேபோல், புனேரி பல்டன்ஸ் அணி 13ல் வெற்றி, 2ல் தோல்வி, 3 போட்டிகளில் டை செய்துள்ளதால் 76 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 


இன்று படைக்கவிருக்கும் ரெக்கார்ட்கள்:


தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தரின் ப்ரோ கபடி லீக் வரலாற்றில் 400 ரெய்டு புள்ளிகளை எட்ட இன்னும் 6 ரெய்டு புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது.


இரு அணிகளின் விவரம்: 


தமிழ் தலைவாஸ்  : அஜிங்க்யா பவார், சாகர் ரதி (கேப்டன்), ஹிமான்ஷு, ஜதின், ஹிமான்ஷு சிங், செல்வமணி கே, ஹிமான்ஷு, எம் அபிஷேக், சாஹில், மோஹித், ஆஷிஷ், நரேந்தர், அமீர்ஹோசைன் பஸ்தாமி, முகமதுரேசா கபௌத்ரஹாங்கி, ரித்திக், மசன்முது


புனேரி பல்டன்ஸ் : அபினேஷ் நடராஜன், கௌரவ் காத்ரி, சங்கேத் சாவந்த், பங்கஜ் மோஹிதே, அஸ்லாம் இனாம்தார் (கேப்டன்), மோஹித் கோயத், ஆகாஷ் ஷிண்டே, பாதல் சிங், ஆதித்யா ஷிண்டே, முகமதுரேசா ஷட்லூயி சியான்னே, வஹித் ரெசைமெர், ஹர்தீப் எஹமத் முஸ்தா


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:


தமிழ் தலைவாஸ் : சாஹில் குலியா (கேப்டன்), மோஹித், அமிஹோசைன் பஸ்தாமி, எம் அபிஷேக், நரேந்தர், ஹிமான்ஷு நர்வால், விஷால் சாஹல்


புனேரி பல்டன் : அஸ்லாம் இனாம்தார் (கேப்டன்), மோஹித் கோயத், ஆகாஷ் ஷிண்டே, முகமதுரேசா ஷட்லு, கௌரவ் காத்ரி, அபினேஷ் நடராஜன், சங்கேத் சாவந்த்