Tamil Thalaivas PKL 2023: நாளைக்கு மேட்ச்! சொந்த மண்ணில் களமிறங்கும் தமிழ் தலைவாஸ் பாட்னாவை பறக்கவிடுமா?

Tamil Thalaivas PKL 2023: போட்டிகள் அனைத்தும் சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

Continues below advertisement

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் மிகவும் பிரசித்து பெற்ற விளையாட்டுகள் என்றால் ஐந்து போட்டிகளை வரிசைப்படுத்துவதே மிகவும் கடினமான சவாலாக இருந்தது. இப்படியான நிலையில், இந்தியாவில் நடைபெற்றுவரும் கிளப் விளையாட்டு போட்டிகள் அதாவது லீக் போட்டிகள் (இந்தியன் பிரீமியர் லீக், ப்ரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக்)  இந்தியாவில் வளர்தெடுக்கப்படவேண்டிய விளையாட்டுகளை இதுபோன்ற லீக் போட்டிகள்தான் இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கொண்டு சென்று, விளையாட்டின் மீதான ஆர்வத்தினை தூண்டுவதற்கான காரணிகளில் ஒன்றாக உள்ளது. 

Continues below advertisement

ப்ரோ கபடி லீக்:

இந்நிலையில் இந்தியாவில் தற்போது மிகவும் ஆக்ரோசமாக நடைபெற்று வரும் லீக் போட்டி என்றால் அது ப்ரோ கபடி லீக். மொத்தம் 12 அணிகள் களமிறங்கியுள்ள இந்த லீக்கில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருக்கும் ஒரு விஷயம் என்றால், தமிழ்நாட்டினை ப்ரோ கபடி லீக்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தலைவாஸ் அணி, எதிர் அணிகளை துவம்சம் செய்து தனது முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான். 

லட்சக்கணக்கான ரசிகர்களின் எண்ணத்தை இந்தாண்டு தமிழ் தலைவாஸ் அணி பூர்த்தி செய்யும் என்ற நோக்கில் களமிறங்கியுள்ளது. இதுவரை நான்கு போட்டிகளில் களமிறங்கியுள்ள தமிழ் தலைவாஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது. 

நாளை பாட்னாவுடன் மோதல்:

இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி நாளை பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இது மட்டும் இல்லாமல் நாளை மறுநாள் அதாவது வரும் சனிக்கிழமை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. அதன்பின்னர் டிசம்பர் 25ஆம் தேதி ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியையும், 27ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியையும் எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டிகள் அனைத்தும் சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள SDAT பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கும் நான்கு போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி வெற்றியைக் கைப்பற்றினால் புள்ளிப்பட்டியலில் டாப்பிற்குச் செல்வார்கள். 

தமிழ் தலைவாஸ் அணியில் உள்ள வீரர்கள்

அஜிங்க்யா பவார், நரேந்தர், செல்வமணி கே, விஷால் சாஹல், ஹிமான்ஷு நர்வால், ஹிமான்ஷு சிங், நிதின் சிங், ஜதின், சதீஷ் கண்ணன், மாசானமுத்து லக்ஷனன், எம் அபிஷேக், ஹிமான்ஷு, சாகர் (கேப்டன்), ஆஷிஷ், மோஹித், சாஹில் குலியா, அமீர்ஹோசைன் பஸ்தாமி, ரோன், முகமதுரேசா கபௌத்ரஹங்கி மற்றும் ரித்திக்

Continues below advertisement
Sponsored Links by Taboola