ப்ரோ கபடி லீக் சீசன் 10ன் 99வது ஆட்டத்தில் இன்று ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு பாட்னாவில் உள்ள பாட்லிபுத்ரா உள்விளையாட்டு ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 


கடந்த போட்டிகளில் இரு அணிகளும் எப்படி..? 


கடந்த ஜனவரி 28ம் தேதி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக 28-28 என்ற கணக்கில் போட்டியை டிரா செய்தது. மறுபுறம், அதேநாளில் தமிழ் தலைவாஸ் தனது கடைசி ஆட்டத்தில் யு மும்பா அணியை 50-34 என வீழ்த்தி வெற்றி பெற்றது.


ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் அணிகள் நேருக்குநேர்:


ப்ரோ கபடி லீ வரலாற்றில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் இதுவரை 9 முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில், அதிகபட்சமாக ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 5 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ் தலைவாஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில்,  இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் டிரா ஆகியுள்ளது. 


கடைசியாக இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியை 25-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. 


புள்ளி பட்டியலில் இரு அணிகளின் தரவரிசை:


16 போட்டிகளுக்குப் பிறகு, ப்ரோ கபடி லீக் சீசன் 10 புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை ஜெய்ப்பூர் அணி 11 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் 66 புள்ளிகள் குவித்து சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 


அதேசமயம், தமிழ் தலைவாஸ் 40 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 7 வெற்றியும், 9 முறை தோல்வியடைந்தாலும், கடந்த சில போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. 


இரு அணிகளின் விவரம்: 


ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்


ரைடர்கள்- ராகுல் சவுதாரி, அர்ஜுன் தேஷ்வால், அஜித் குமார், பவானி ராஜ்புத், தேவாங்க், நவ்நீத் ஷெராவத், அமீர் ஹொசைன் முகமதுமலேகி, ஷஷாங்க், அபிஜீத் மாலிக்.


டிஃபெண்டர்கள்- சுனில் குமார், சாகுல் குமார், அங்குஷ், சுமித், அபிஷேக் கே.எஸ்., ரேசா மிர்பாகேரி, லக்கி ஷர்மா, ஆஷிஷ், லாவிஷ்.


தமிழ் தலைவாஸ்


ரைடர்ஸ்- நரேந்தர் கண்டோலா, அஜிங்க்யா அசோக் பவார், ஹிமான்ஷு, ஜதின்.


டிஃபெண்டர்கள்- சாகர், சாஹில், எம் அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, ஆஷிஷ், எம்டி ஆரிப் ரப்பானி, அர்பித் சரோஹா, அங்கித்.


ஆல்-ரவுண்டர்கள்- தனுஷன் லக்ஷ்மமோகன், விஸ்வநாத் வி, கே அபிமன்யு.


இன்றைய போட்டியில் படைக்கவிருக்கும் மைல்கற்கள்:


பிகேஎல்லில் 100 டிபெண்ஸ் புள்ளிகளை எட்டுவதற்கு தமிழ் தலைவாஸின் எம்.அபிஷேக்கிற்கு இன்னும் 7 டிபெண்ஸ் புள்ளிகள் மட்டுமே தேவையாக உள்ளது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- சாஹுல் குமார், ரேசா மிர்பாகேரி, அங்குஷ் ஜூனியர், சுனில் குமார் (கேப்டன்), அபிஷேக் கே.எஸ், அர்ஜுன் தேஷ்வால், வி அஜித் குமார்.


தமிழ் தலைவாஸ்- சாகர் (கேப்டன்), சாஹில், மோஹித், அபிஷேக், ஹிமான்ஷு, அஜிங்க்யா பவார், நரேந்தர்.


போட்டியை எங்கு காணலாம்..?


ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் vs தமிழ் தலைவாஸ் போட்டியின் லைவ்-ஆக்ஷன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். மேலும், மொபைலில் ஹாட்ஸ்டார் ஆப் மூலம் நேரடியாக கண்டு களிக்கலாம்.