Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் நேற்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தியுள்ளது.   


 இந்திய கபடி ரசிகர்களுக்கு பெரிய விருந்து அளிக்கும் ப்ரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் கடந்த வெள்ளிக் கிழமை (07/10/2022) தொடங்கியது. 12 அணிகள் களமிறங்கிய இந்தத் தொடர் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த முறை ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் நடைபெற்றது. அதில் பல வீரர்கள் எடுக்கப்பட்டனர்.


இந்த சீசனில் நேற்று இரண்டு போட்டிகள் நடந்தது. முதலில் மாலை 7.30 மணிக்கு நடந்த போட்டியில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தின. அதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளான பாட்னா பைரேட்ஸ்  அணியும்  தெலுகு டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.


ஹரியாணா ஸ்டீலர்ஸ் vs தமிழ் தலைவாஸ்


நேற்று இரவு 7. 30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் வெற்றிக் கணக்கினை துவங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் அணியும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹரியானா அணி, போட்டி முடிவில் தமிழ் தலைவாஸ் அணியை 27 - 22 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியிலும் தோல்வியைச் சந்தித்ததின் மூலம் இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி இன்னும் வெற்றிக் கணக்கினை துவங்காமல் இருக்கிறது. 






பாட்னா பைரேட்ஸ் vs தெலுகு டைட்டன்ஸ்


நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பாட்னா பைரேட்ஸ்  அணியும்  தெலுகு டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே மிகவும் சிறப்பான ரைய்டுகள் மூலம் அணிக்கு ஆரம்பம் முதலே புள்ளிகளை சேர்த்து வந்தனர். இந்த போட்டியின் முடிவில் 30 - 21 எனும் புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சந்தித்த தோல்வி பாட்னா அணிக்கு மூன்றாவது தொடர் தோல்வியாகும். இன்னும் இந்த சீசனில் பாட்னா அணி தனது வெற்றிக் கணக்கினை துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.