ஆஸ்திரேலிய ஓபனில் ரோஹன் போபண்ணா தனது ஜோடியான மேட் எப்டனுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா - மாட் எம்ப்டன் ஜோடி இத்தாலியின் சிமோன் பொலேலி மற்றும் வவசோரி ஜோடியை 7-6, 7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையை ரோஹன் போபண்ணா பெற்றுள்ளார். 


ரோஹன் போபண்ணாவுக்கு முன், கிராண்ட்ஸ்லாம் வென்ற மிக வயதான வீரர் நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஆவார். இவர் 40 வயது 9 மாதங்களில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். ஆனால் தற்போது ரோஹன் போபண்ணா 43 வயது 9 மாதங்களில் இந்த பட்டத்தை வென்றுள்ளார்.  


முன்னதாக, ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஆகியோர் அரையிறுதியில் தாமஸ் மக்காச் மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை வீழ்த்தினர். ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி 6-6, 3-6 மற்றும் 7-6 (10-7) என்ற செட் கணக்கில் தாமஸ் மக்காச் மற்றும் ஜாங் ஜிசென் ஜோடியை தோற்கடித்தது. ஆஸ்திரேலிய ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹன் போபண்ணா மற்றும் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதியில் வெற்றி பெற்று உலக நம்பர்-1 ஆனது.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஹன் போபண்ணா சாம்பியன் பட்டத்தை வென்றதை தொடந்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து: 


உண்மையான திறமைக்கு எல்லையே தெரியாது.






 ஆஸ்திரேலிய ஓபனை வென்றதற்காக ரோஹன் போபண்ணாவிற்கு பாராட்டுக்கள். உங்கள் இடைவிடாத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன், நீங்கள் ஒரு உலகளாவிய அடையாளமாகிவிட்டீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கும் எங்களது வாழ்த்துகள். 


பிரதமர் மோடி வாழ்த்து: 


மீண்டும் மீண்டும், அபார திறமைகளால் ரோஹன் போபண்ணா வயது ஒரு தடையல்ல என்பதை காட்டுகிறார்!






வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் வெற்றிக்கு அவருக்கு வாழ்த்துக்கள். எப்பொழுதும் நமது ஆன்மா, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறன்களை வரையறுக்கிறது என்பதை அவரது குறிப்பிடத்தக்க பயணம் ஒரு அழகான நினைவூட்டலாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.