தென்கொரியாவின் செங்க்வான் பகுதியில் பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா சார்பில் பல்வேறு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 25 மீட்டர் பிஸ்டல் கலப்பு எஸ்.ஹெச் 1 இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ராகுல் ஜக்ஹர் மற்றும் பூஜா அகர்வால் ஆகிய இருவரும் தகுதி பெற்று இருந்தனர். 


முதலில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் ராகுல் ஜக்ஹர் 574 புள்ளிகள் எடுத்தார். பூஜா அகர்வால் 557 புள்ளிகள் எடுத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராகுல் ஜக்ஹர் 15-19 என பின் தங்கியிருந்தார். இறுதியில் அவர் 20 புள்ளிகள் எடுத்து முதலிடத்திற்கு தென்கொரியா வீரருடன் டை செய்திருந்தார். இதையடுத்து நடைபெற்ற ஷூட் ஆஃப் முறை நடத்தப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்டு ராகுல் ஜக்ஹர் முதலிடம் பிடித்தார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். 


 






இதேபிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனையான பூஜா அகர்வால் 14 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினார். ஒரு பிரிவில் இந்திய அணிக்கு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைத்திருந்தது. 


 






மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் எஸ்.ஹெச் 1 பிரிவில் இந்தியா சார்பில் அவானி லெகாரா பங்கேற்றார். இவர் தகுதிச் சுற்று போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் இவர் 243.7 புள்ளிகள் எடுத்தார். அத்துடன் தென்கொரியா வீராங்கனையான யுன்ரி லீக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தார். அத்துடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இதேபிரிவில் அவானி லெகாரா தங்கப்பதக்கம் வென்று இருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அவானி லெகாரா வெள்ளி வென்றுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண