பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (BWF Para Badminton World Championships ) தமிழ்நாடு வீராங்கனை மனிஷா ராமதாஸ்  (Manisha Ramadass) தங்கம் வென்றார். 


ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் (SU5 category) இந்தியாவின் மனிஷா ராமதாஸ்., ஜப்பான் வீராங்கனை மமிகோ டோயோடாவை  ( Mamiko Toyoda ) எதிர்கொண்டார். 30 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 21-15, 21-15 என்ற நேர் செட் கணக்கில் மமிகோவை வீழ்த்தி மனிஷா வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.






பிரமோத் பகத் தங்கம்:


ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரமோத் பகத் சகநாட்டு வீரரான நிதிஷ் குமாரை  (Nitesh Kumar) எதிர்கொண்டார். 53 நிமிடங்கள் தொடர்ந்த ஆட்டத்தில் 21-19, 21-19  என்ற நேர் செட் கணக்கில் நிதிஷ் குமாரை தோற்கடித்தார்.






உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பிரமோத் பகத் பெறும் நான்காவது தங்கம் இதுவாகும். இவர் தொடரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். 


டோக்கியில் நடைபெற்ற போட்டிகளில் இன்றுடன் நிறைவடைந்தன. இந்த தொடரில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 12 வெண்கலம் உட்பட மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளது. 


 




பதக்கம் பெற்றவர்களின் விவரம்: 


தங்கம்:


பிரமோத் பகத்


மனிஷா ராமதாஸ்


வெள்ளி:



நிதிஷ் குமார்


மனோஷ் சர்கார், பிரமோத் பகத்


வெண்கலம்:


நிதிய ஸ்ரீ


பாருல் பார்மர்


மானசி ஜோசி


மனோஷ் சர்கார் 


சுகந்த் கடம்


லடாடாய் உம்ரெகர்


நித்ய ஸ்ரீ மற்றும் ரச்சனா படேல்


மன்தீப் கரூர் மற்றும் மனிஷ் ராமதாஸ்


நித்ய ஸ்ரீ மற்றும் கிருஷ்ணா நாகர்


ருத்திக் ரகுபதி மற்றும் மான்சி ஜோசி 


சிராக் பரேதா மற்றும் ராஜ் குமார்


ஹார்திக் மக்கர் மற்றும் ருத்திக் ரகுபதி 


இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.