ஆசிய பாராவிளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பாரா தடகள வீரர்கள் இதுவரை இல்லாத அளவில் 114 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயாவில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.  

Continues below advertisement

பதக்கங்களை அள்ளிய இந்தியா!

இப்போட்டித்தொடரில் இந்தியா தரப்பில் மொத்தமாக 168 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இத்தொடரில் மொத்தமாக 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என  114 பதக்கங்களை வென்று ஆசிய பாரா விளையாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா பதக்கங்களை தனதாக்கியுள்ளது. இதில் பங்கேற்ற தமிழத்தை சேர்ந்த சோலைராஜ் தர்மராஜ், நவீன் சிவகுமார், துளசிமதி முருகேசன், பேபி சஹானா  உள்ளிட்டோர் பதக்கங்களை கைப்பற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

பதக்கப்பட்டியலில் இந்தியாவிற்கு 4-ஆம் இடம்

பாரா விளையாட்டுப்போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதற்கான நிறைவுவிழா சனிக்கிழமை நடைபெற உள்ளது. மொத்தமாக 45 நாடுகள் பங்கேற்ற இப்போட்டித்தொடரில் 427 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தையும், 185 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாம் இடத்தையும், 145 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் மூன்றாமிடத்தையும் அதற்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா விளையாட்டுப்போட்டிகளில் இந்தியா மொத்தமாக 108 பதக்கங்களை மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement