மறைந்த செஸ் வீரர் மிர் சுல்தான் கான் பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார். அவர் இறந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இந்த பட்டத்தை உலக செஸ் கூட்டமைப்பு வழங்கியுள்ளது. மிர் சுல்தான் 1929, 1931 மற்றும் 1931ம் ஆண்டுகளில் பிரிட்டிஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றிருந்தார். அதேபோல், ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சவில் டார்டகோவர் மற்றும் முன்னாள் உலக சாம்பியனான ஜோஸ் ரவுல் கபாப்லாங்கா போன்ற ஜாம்பவான்களை வென்றுள்ளார்.
மிர் சுல்தான் கான் அப்போது பிரிக்கப்படாத இந்தியா - பாகிஸ்தானில் ஆசியாவின் தலைசிறந்த செஸ் வீரராக திகழ்ந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இந்தியாவுக்கு விளையாடிருந்தாலும், இப்போது 2024ல் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார்.
58 ஆண்டுகளுக்கு முன்பு காசநோயால் உயிரிழப்பு:
2024ம் ஆண்டு பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் பட்டம்பெற்ற மிர் சுல்தான் கான், 58 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அதாவது, 1966ம் ஆண்டு காசநோயால் உயிரிழந்தார்.
யார் இந்த மிர் சுல்தான்..?
மிர் சுல்தான் கான் 1903ம் ஆண்டு பஞ்சாபின் குஷாப் மாவட்டத்தில் உள்ள மீத்தா திவானாவில் பிறந்தார். இந்த இடம் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு எல்லைக்கு உட்பட்டது. மிர் சுல்தான் நிலப்பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுவயதில் அவர் தனது சகோதரர்களுடன் சதுரங்கம் விளையாடியதாவதும், அதே சமயம் இந்த விளையாட்டின் நுணுக்கங்களை அவரது தந்தை மியான் நிஜாம் தீன் கற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த குழந்தை பருவ ஆர்வமும், அர்ப்பணிப்பும்தான் மிர் சுல்தானை பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆக்கியது.
சிறு வயதிலேயே செஸில் மிர் சுல்தான் சிறப்பாக விளையாடியதை பார்த்து, பணக்கார நில உரிமையாளர் சர் உமர் திவானா மிகவும் ஈர்க்கப்பட்டார். பயிற்சியின் போது, 1928ல் நடந்த 'அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப்' போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டே, சர் உமர் திவானின் உதவியால், மிர் சுல்தான் நேராக லண்டனுக்கு அழைத்துச் சென்று இம்பீரியல் செஸ் கிளப்பில் உறுப்பினராக்கினார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பிலும் மீர் சுல்தான் வென்றார். இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் இருந்து விளையாட அழைப்பு வந்தது. 1930ம் ஆண்டு மிர் சுல்தான் ஐரோப்பா செல்வதற்கு முன், அவர் இந்தியாவுக்கு வர முடிவு செய்தார். அதன் பிறகு அவர் ஐரோப்பா சென்றார். ஐரோப்பாவில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்றார். அதே நேரத்தில், 1930 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் நடந்த 11 வது ஹேஸ்டிங்ஸ் கிறிஸ்துமஸ் செஸ் விழாவில் அவர் தனது மிகப்பெரிய போட்டியாளரும், அக்கால சாம்பியனுமான ஜோஸ் ரவுல் கேபப்லாங்காவை தோற்கடித்தார்.
மிர் சுல்தான் 1940 ம் ஆண்டு வரை செஸ் விளையாடியதாக நம்பப்படுகிறது. இதன் பிறகு பிரிட்டனில் இருந்து வந்த பிறகு மும்பையிலும் ஒரு போட்டி நடந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, மிர் பாகிஸ்தானில் தங்க முடிவு செய்து, தனது மனைவி மற்றும் மகன்களுடன் பாகிஸ்தானில் வசித்து வந்தார். மிர் 1966ம் ஆண்டு 'காசநோய்' காரணமாக உயிரிழந்தார்.