இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரும் உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவருமான கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். இது மட்டும் இல்லாமல் ஒரே உலகக் கோப்பையில் இரண்டு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரரும் இவர்தான். 

முகமது ஷமி மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டினைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான வைஷாலிக்கும் அர்ஜினா விருது கொடுக்கப்பட்டுள்ளது. இவர் சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த வைஷாலிக்கு அர்ஜினா விருது வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மொத்தம் 26 வீரர் வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

2023-ஆம் ஆண்டில் விளையாட்டுகளில் சிறந்து விளங்கியதால் அர்ஜுனா விருது பெறும் விளையாட்டு வீரர்- வீராங்கனைகள்

1. ஓஜஸ் பிரவின் டியோடலே (வில்வித்தை)

2. அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)

3. ஸ்ரீசங்கர் எம் (தடகளம்)

4. பருல் சவுத்ரி (தடகளம்)

5. முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)

6. ஆர் வைஷாலி (சதுரங்கம்)

7. முகமது ஷமி (கிரிக்கெட்)

8. அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)

9. திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி ஆடை)

10. திக்ஷா தாகர் (கோல்ப்)

11. கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)

12. புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி)

13. பவன் குமார் (கபடி)

14. ரிது நேகி (கபடி)

15. நஸ்ரீன் (கோ-கோ)

16. பிங்கி (லவன் பவுல்ஸ்)

17. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கிச் சூடு)

18. இஷா சிங் (துப்பாக்கிச் சூடு)

19. ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)

20. அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)

21. சுனில் குமார் (மல்யுத்தம்)

22. ஆன்டிம் (மல்யுத்தம்)

23. நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)

24. ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)

25. இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட்)

26. பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)

2023ஆம் ஆண்டில் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது பெறுபவர்கள் 

1. லலித் குமார் (மல்யுத்தம்)

2. ஆர்.பி.ரமேஷ் (செஸ்)

3. மஹாவீர் பிரசாத் சைனி (பாரா தடகளம்)

4. சிவேந்திர சிங் (ஹாக்கி)

5. கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர் (மல்லகாம்ப்)

(iv) விளையாட்டு மற்றும் விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது 2023:

வ. எண்

பயிற்சியாளரின் பெயர்

விளையாட்டு

1.

 மஞ்சுஷா கன்வார்

பூப்பந்து

2. 

வினீத் குமார் சர்மா

ஹாக்கி

3.

 கவிதா செல்வராஜ்

கபடி

 

தேசிய விளையாட்டு விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கவும் வெகுமதி அளிக்கவும் வழங்கப்படுகிறது.