''நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தமாக்குண்டா.. அது தான் இந்த ஊருடா''னு.. சான்சே இல்லாத ஒரு சாங்க போட்டு பட்டைய கிளப்பினாரு அனிருத். கோயம்பேட்ல, எக்மோர்ல, ஏர்போர்ட்லனு சென்னையில கால் வைக்குற யாரா இருந்தாலும்.. 'அட ஆமாம்.. மெட்ராசு என்னோட இன்னொரு நேட்டிவ்'னு சொல்ல வச்சிடும் இந்த சிங்கார சென்னை. 'இங்க யாரு வந்துட்டாலும், நீ என் வூட்டு புள்ள'னு கட்டி அணைச்சுக்கும் நம்ம சென்னை நமக்காக ஆட வந்த தோனியை மட்டும் விட்டு வைக்குமா என்ன? மத்தவங்கள கையோட அழைச்சுட்டு போற சென்னை தோனியை நெஞ்சோட அணைச்சுக்கிட்டு. ஐபிஎல் ஒரு பிசினஸ், ஒரு கேம் அப்படி இப்படினு ஆயிரம் சொன்னாலும் சென்னைக்கும், ஐபிஎல்க்கும், தோனிக்கும் ஒரு பெரிய பாண்ட் இறுகிக்கிடக்கு. இந்த இடத்துல சென்னைனா, தாம்பரத்துல இருந்து கடலுக்கும், பாலவாக்கத்துல இருந்து ஆந்திர பார்டருக்கும் கணக்கு இல்ல. தோனி விஷயத்துல சென்னை லவ்னா அது தமிழ்நாட்டோட ரிப்லக்ஷன் தான்.
சென்னையோட செல்லப்பிள்ளை தோனினா அது தமிழ்நாட்டோட செல்லப்பிள்ளைங்றதுதான் சங்கதி. அதாரு.. அதாரு.. உதாரு.. உதாருன்னு நீல கலர் இந்திய ஜெர்சியை போட்டுகிட்டு அசால்ட்டா பல சம்பவங்கள செஞ்சிட்டு இருந்த மகேந்திர சிங் தோனி, மஞ்சக் கலர் ஜெர்சியை போட்டப்பிறகு தான் தல தோனியா இங்க வந்தாரு. தோனி இண்டர்நேஷனல் மேட்ல இருந்து ஒதுங்கிக்கிறேனு சென்னைல ஒக்காந்துகிட்டுதான் சொன்னாரு.. அப்பக்கூட கண்ணுல தண்ணி வச்ச பேன்சு பூறாவும் 'விடுங்கப்பா.. தலய மஞ்ச ஜெர்ஸில மாஸா பாக்கலாம்'னு தனக்குதானே ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க.. எல்லாத்துக்கும் மொத புள்ளி இந்த ஐபிஎல் தான்.
ஏது? இந்திய டீமே பிரிஞ்சுகிடக்குமா? பாரின் பிளேயர் நம்ம டீம்ல இருப்பாங்களா? இந்த கான்செப்ட் வேலைக்காவாது.. நம்ம ஊரு ஆளயே, எவனாவது போட்டியா பாப்பானா? இப்படித்தான் ஐபிஎல் தொடங்குனப்ப வந்துது டாக். ஆனா அப்றம் நடந்த கத எல்லாருக்குமே தெரியும். கத்திய எடுத்து வெட்டிக்கல குத்திக்கல மத்தபடி எல்லா சண்டையும் இந்த ஐபிஎல் உண்டாக்கிச்சு.. இண்டர்நேஷனல்ல ஒரு இந்தியா - பாகிஸ்தான்னா.. ஐபிஎல் ல ஒரு சென்னை- மும்பைனு ஆகிப்போச்சு.. எப்படா ஐபிஎல் வரும்.. சண்ட செய்யலாம்னு காத்துக்கிடந்தது ஒரு பெங்கூட்டம்.. இப்படி எதிர்பார்த்ததவிட வேற லெவல்ல ரீச் ஆச்சுஇந்த ப்ரீமியர் லீக். இந்த எதிர்பார்ப்பும், ரீச்சும் ரசிகர்கள்ட மட்டும் இல்ல.. ப்ளேயர்ஸ்கிட்டவும் ஒரு நெருக்கத்த உண்டாக்கிச்சு.. அதுதான் அந்தந்த ஊரோட நெருக்கம்.
வருஷா வருஷம் ஒரு பேமிலி ட்ரிப்பாவே அந்த ஊருக்காகவும், அந்த டீமுக்காகவும் ப்ளேயர்ஸ் வந்து போறதும் தான் இந்த நெருக்கத்துக்கு ரீசன். இந்த நெருக்கமும், அன்பும் தான் இரண்டு வருஷ கேப் விட்டு மறுபடி சென்னை டீமுக்காக தோனி கையெழுத்து போட்டப்ப 'பேக் கோம் மஹி'னு சாக்ஷிய கேட்க வைச்சது. ஆமா.. 'கேம் டூ ஹோம்'னு அழகா தோனிய சொல்ல வச்சிது. ஊரோட இந்த லவ், வெறும் காத்துக்கும், மண்ணுக்குமானது இல்ல. அது அந்த ஊரோட சனத்தோட லவ்வு.
எனக்கு எல்லாத்தவிடவும் தல தலனு சொல்றதுதான் பிடிக்கும்னு நம்ம தல தோனியே சொன்னதுக்கு பின்னாடி கோடான கோடி ரசிகர்கள் இல்லாம வேறு யாரு இருக்கா? நம்ம ஊரோட ஸ்பெஷலே எது யாரு கொடுத்தாலும் அத தாரு மாறா திருப்பி கொடுக்றது. அதே கான்செப்ட்ல தோனி கொடுத்த பாசத்தையும், காதலையும் பல மடங்கு அள்ளித்தூவுனாங்க தல பேன்ஸ்.. தல தோனியின் பேன்ஸ்.
தல பேன்ஸுன்னு சொன்னதும், வராரு விளையாடுறாரு அவருக்கான பேன்ஸூனு மட்டும்னு சுருக்கிக்க முடியாது. இந்த அன்பு, சாக்ஷி, ஸிவானு தொடரும் தான்.. தோனியோட பார்ம் ஹவுஸ், பைக், காருனு, நாய், குதுரனு தோனி விரும்புற எல்லாத்தையும் நம்ம வீட்ல ஒன்னாவே நினைச்சு பாக்குறதும், அத வைரலாக்குறதும் நம்ம ஊரு தோனி கன்னிங்கதான். சேப்பாக்கம் கிரவுண்ட சுத்தி தோனி பேருலயும், அவரோட போட்டோ போட்டும் எத்தன கடைங்க, கடலூர்ல கட்டுன வீட்டுக்கு மஞ்ச் பெய்ண்ட் அடிச்சு தோனி பேரு வச்சாரே ஒரு ஃபேனு, நடுராத்திர தோனி மீனம்பாக்கம் வந்தாலும் குவிஞ்சு நிக்குதுல்ல கூட்டம், அது பிராக்டீஸ் மேட்சா இருந்தாலும் புல்லாவுதுல கிரவுண்ட் இதெல்லாம் வெறும் கிரிக்கெட் - ஃபேன் நெருக்கம் மட்டுமல்ல. அதையும் தாண்டுனது. அது தோனிக்கும் - சென்னைக்குமான நெருக்கம். அது வார்த்தையால சொல்லமுடியாத ஒரு ஃபீல்.
எது எப்படியோ, இந்திய டீமோட தோனி ஐபிஎல் வந்த பின்னாடி சென்னையோட தோனியா ஆகிட்டாரு. இனி ப்யூட்சர்ல ஐபிஎல் நடந்தாலும், நடக்கலனாலும், தோனி இருந்தாலும், ஒதுங்கி போனாலும் சென்னையோட செல்லப்பிள்ள தோனிதான்,எங்க தல தோனி தான்.. சென்னையும் தோனிக்கு இன்னொரு வீடு தான்.. எப்பவும்.. ஏன்ன்னா..? இங்க வந்து கிடந்து போன பின்னாடி இந்த ஊர வெறும் ஊரா பாக்கவே முடியாது. சென்னையோட ராசி அப்படி. அதான் முன்னாடியே சொன்னங்களே, நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தமாக்குண்டா.. அது தான் இந்த ஊருடா.