மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தில் 15வது ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வருகின்ற ஜனவரி 13 ம் தேதி 29 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகள் அனைத்து புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் மற்றும் ரூர்கேலாவின் பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கில் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. 

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேறக உலகம் முழுவதிலுமிருந்து 16 அணிகள் ஏற்கனவே தகுதிபெற்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. நடப்பு சாம்பியனான பெல்ஜியம், ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும், நெதர்லாந்து, நியூசிலாந்து, மலேசியா, சிலி அணிகள் குரூப் சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. 

இறுதியாக போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் வேல் ஆகிய அணிகள் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

இடம்பெறாத பாகிஸ்தான்: 

இருப்பினும், நான்கு முறை ஆண்கள் ஹாக்கில் உலகக் கோப்பை சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தாண்டு உலகக் கோப்பை தொடரில் இடம்பெறவில்லை. இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஏன் இந்த தொடரில் இடம்பெறவில்லை என கீழே பார்ப்போம்.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் பாகிஸ்தான் ஹாக்கி அணி விளையாடவில்லை. 2022 ஆடவர் ஹாக்கி ஆசியக் கோப்பையில் முதல் நான்கு இடங்களுக்குள் பாகிஸ்தான் இடம்பெறவில்லை இதுவே இதற்கு காரணம். 

இந்தோனேசியாவில் கடந்த 2022 நடந்த ஆண்கள் ஹாக்கி ஆசியக் கோப்பையில் ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் பியில் இடம்பெற்றிருந்தனர். பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டு 1-1 என டிரா செய்தது. பின்னர் 13-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் இந்தோனேசியாவை தோற்கடித்தாலும், ஜப்பானிடம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 

தொடர்ந்து, இந்திய அணி இந்தோனேசியாவை 16-0 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதனால் பாகிஸ்தான் 2022 ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பையில் கோல் வித்தியாசத்தில் வெளியேறியது. இதன் விளைவாகவே, பாகிஸ்தான் தனது வரலாற்றில் இரண்டாவது முறையாக மட்டுமே ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதிபெற தவறியது. 

முழு அட்டவணை: 

அணி vs அணி தேதி நேரம்  இடம்
அர்ஜென்டினா vs தென் ஆப்பிரிக்கா 13 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி புவனேஷ்வர்
ஆஸ்திரேலியா vs பிரான்ஸ் 13 ஜனவரி 2023 மாலை 3:00 மணி புவனேஷ்வர்
இங்கிலாந்து vs வேல்ஸ் 13 ஜனவரி 2023 மாலை 5:00 ரூர்கேலா
இந்தியா vs ஸ்பெயின் 13 ஜனவரி 2023 மாலை 7:00  ரூர்கேலா
நியூசிலாந்து vs சிலி 14 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி ரூர்கேலா
நெதர்லாந்து vs மலேசியா 14 ஜனவரி 2023 மாலை 3:00 மணி ரூர்கேலா
பெல்ஜியம் vs கொரியா 14 ஜனவரி 2023 மாலை 5:00 புவனேஷ்வர்
ஜெர்மனி vs ஜப்பான் 14 ஜனவரி 2023 மாலை 7:00  புவனேஷ்வர்
ஸ்பெயின் vs வேல்ஸ் 15 ஜனவரி 2023 மாலை 5:00 ரூர்கேலா
இங்கிலாந்து vs இந்தியா 15 ஜனவரி 2023 மாலை 7:00 ரூர்கேலா
மலேசியா vs சிலி 16 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி ரூர்கேலா
நியூசிலாந்து vs நெதர்லாந்து 16 ஜனவரி 2023 மாலை 3:00 மணி ரூர்கேலா
பிரான்ஸ் vs தென் ஆப்பிரிக்கா 16 ஜனவரி 2023 மாலை 5:00 புவனேஷ்வர்
அர்ஜென்டினா vs ஆஸ்திரேலியா 16 ஜனவரி 2023 மாலை 7:00 புவனேஷ்வர்
கொரியா vs ஜப்பான் 17 ஜனவரி 2023 மாலை 5:00 புவனேஷ்வர்
ஜெர்மனி vs பெல்ஜியம் 17 ஜனவரி 2023 மாலை 7:00 புவனேஷ்வர்
மலேசியா vs நியூசிலாந்து 19 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி புவனேஷ்வர்
நெதர்லாந்து vs சிலி 19 ஜனவரி 2023 மாலை 3:00 மணி புவனேஷ்வர்
ஸ்பெயின் vs இங்கிலாந்து 19 ஜனவரி 2023 மாலை 5:00 புவனேஷ்வர்
இந்தியா vs வேல்ஸ் 19 ஜனவரி 2023 மாலை 7:00  புவனேஷ்வர்
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா 20 ஜனவரி 2023 பிற்பகல் 1:00 மணி ரூர்கேலா
பிரான்ஸ் vs அர்ஜென்டினா 20 ஜனவரி 2023 மாலை 3:00 மணி ரூர்கேலா
பெல்ஜியம் vs ஜப்பான் 20 ஜனவரி 2023 மாலை 5:00 ரூர்கேலா
கொரியா vs ஜெர்மனி 20 ஜனவரி 2023  மாலை 7:00  ரூர்கேலா