தாய்லாந்தின் பாங்காங் நகரில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி பெற்றார்.


அரையிறுதி :


இதன்மூலம், ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் மனிகா பத்ரா.






நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை மிமா லடோவை சந்திக்கிறார் மனிகா பத்ரா.
முன்னதாக, தைவான் வீராங்கனை சென் ஸு-யூவை காலிறுதியில் மனிகா பத்ரா எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில் 4-3 என்ற செட் கணக்கில் சென் ஸூவை வீழ்த்தி பனிகா பத்ரா அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். 






நேற்று நடைபெற்ற காலிறுதியில், இவர் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற சீன வீராங்கனை வாங் யிடியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 44ஆவது இடத்தில் உள்ள மனிகா பத்ரா, 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.


சத்யன் தோல்வி
தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஜப்பான் வீரர் யுகியா யுடாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக மனிகா பத்ரா உள்ளார்.


யார் இந்த மனிகா?


23 வயது மனிகா பத்ரா டெல்லியில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தார். 4 வயதில் டேபிள் டென்னிஸ் விளையாடத் தொடங்கிய அவரது சகோதரி அன்சால், சகோதரர் சாஹில் ஆகியோர் டேபிள் டென்னிஸ் விளையாடுவதைப் பார்த்துதான் அந்த விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டார்.
பயிற்சியாளர் சந்தீப் குப்தாவின் பயிற்சிப் பள்ளியில் இணைந்தார். ஒரு பக்கம் படிப்பைத் தொடர்ந்து கொண்டு மறுபக்கம் டேபிள் டென்னிஸில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.


ஆரம்பிக்கலாங்களா..! "தல" தோனியுடனான புகைப்படத்தை பகிர்ந்து "ராக்ஸ்டார்" ஜடேஜா வெளியிட்ட ட்வீட்!


டேபிள் டென்னிஸுக்காக இளங்கலை பட்டப்படிப்பையும் முடிக்காமல் முதலாம் ஆண்டுடன் கல்லூரிப் படிப்பை விட்டு விலகினார் மனிகா. கடந்த 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டி, அதே ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி, 2015இல் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப், 2016இல் தெற்காசிய விளையாட்டுப் போட்டி, அதே ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் ஆகியவற்றில் இந்தியா சார்பில் பங்கேற்றார் மனிகா பத்ரா.