விழுப்புரம் : மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 69வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டிகளில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்துத் திரும்பிய மாணவர்களைப் பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர்.
தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டி
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 69வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டிகளில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். சாதனை படைத்துத் திரும்பிய மாணவர்களைப் பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனர். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 69வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மல்லர் கம்பப் போட்டிகள் நடைபெற்றன. இந்த தேசியப் போட்டிகளில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகம் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டதில் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் தனிநபர் பிரிவில் விழுப்புரம் சிந்தாமணி பகுதியை சார்ந்த பூமிகா என்கிற மாணவி தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் விழுப்புரம் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவிகள் மதுமிதா, சஞ்சனா, முத்அரசி, ரீனா ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். தனிநபர் பிரிவில் அமிர்தேஸ்வர், தரணிதரன், சஞ்சனா மற்றும் தனுஷா ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
விழுப்புரம் மாணவர்களின் பதக்க விவரங்கள்
மல்லர் கம்பம் போன்ற விளையாட்டுகளில் தமிழ்நாடு சார்பில், குறிப்பாக விழுப்புரம் மாவட்ட மாணவ, மாணவிகள் பெற்ற இந்த அபார சாதனை மாநில அளவிலும் தேசிய அளவிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மல்லர் கம்பத்தில் இளம் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிப்பதில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
உற்சாக வரவேற்பு
தேசிய அளவில் பதக்கங்களை வென்று ரயில் மூலம் வீடு திரும்பிய இந்தச் சாதனை மாணவ, மாணவிகளுக்கு, விழுப்புரம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ரயில் நிலையத்தில் திரண்டு, மாணவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி ஆரவாரத்துடன் வரவேற்றனர். இது மாணவர்களின் எதிர்கால வெற்றிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.