மதுரை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில்  14வது ஹாக்கி இளையோர் உலகப்கோப்பை நடைபெற உள்ளதை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள் வருகை, வரவேற்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

14வது ஹாக்கி இளையோர் உலகப்கோப்பை
 
மதுரை விமான நிலையத்தில் இன்று (20.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் வரும் 28-11-2025 முதல் 10-12-2025 வரை 14வது ஹாக்கி இளையோர் உலகப்கோப்பை நடைபெற உள்ளதை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள் வருகை,வரவேற்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பைப் போட்டி, தமிழ்நாட்டில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கம் மற்றும் மதுரையில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஹாக்கி விளையாட்டரங்கம் ஆகிய இரு இடங்களிலும் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
 
பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது
 
இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க நவம்பர் 21 –ஆம் தேதியன்று தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், நவம்பர் 22-ஆம் தேதியன்று கனடா, பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், நவம்பர் 23-ஆம் தேதியன்று ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், நவம்பர் 24-ஆம் தேதியன்று நமீபியா, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், நவம்பர் 25-ஆம் தேதியன்று ஆஸ்திரியா, ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், நவம்பர் 26 ஆம் தேதியன்று எகிப்து நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் வருகை புரியவுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தமிழர் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தகே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.