லீக்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இன்டர் மியாமி க்ளப் அணியின் வீரர் லயோனல் மெஸ்ஸி, அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்தது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.


கால்பந்து என்றதும் நினைவுக்கு வருவது மெஸ்ஸி, ரோனால்டோதான். இந்நிலையில், அர்ஜெண்டினா அணியில் இருந்து மாறி அமெரிக்காவின் இண்டர் மியாமி அணியில் கால்பந்தாட்ட நட்சத்திர வீரரான மெஸ்ஸி இணைந்ததை, அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியின் கேப்டனும், தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவருமான மெஸ்ஸி, அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் அணியான இண்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார். 2025ம் ஆண்டு மேஜர் லீக் சாக்கர் தொடரின் இறுதி வரை இண்டர் மியாமி அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்த அணியில் இணைந்த பிறகு, முதன் முதலாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற போட்டியின் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மெஸ்ஸி விளையாடினார். 


அப்படியிருக்கையில், யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் இருந்தே விளையாடினார். ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அவர் ஸ்டிரைக் செய்தார். பின்னர். 22-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்தார். மேலும், உரிய நேரத்தில் அசிஸ்ட் செய்ததும் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்தது.






இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லீக்ஸ் கோப்பை தொடரின் ‘ஜே’ பிரிவில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


ESPN FC பகிர்ந்துள்ள டிவிட்டர் வீடியோவில், அணியின் இணை உரிமையாளரான டேவிட் பெக்ஹாம் உடன் கோல் அடித்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டதாக அமைந்துள்ளது. இருவரும் சிரித்து போட்டியில் வென்ற மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடினர்.


இன்டர் மியாமி அணியில் அவருக்கு டிசர்ட் எண் 10 அவர் அர்ஜெண்டினாவில் பயன்படுத்தியதையே வழங்கியுள்ளது.