நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்,
இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோத
இருந்தன. ஏற்கனவே ஏப்ரல் 18-ம் தேதி இவ்விரு அணிகளும் போட்டியிட்ட போது, 38 ரன்கள்
வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இன்று, இரண்டாவது முறையாக
இவ்விரு அணிகளும் மோத இருந்த நிலையில், கொல்கத்தா அணியைச் சேர்ந்த இரண்டு
வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இன்றைய போட்டி
ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வீரரான ‘மிஸ்டிரி ஸ்பின்னர்’ வருண் சக்கரவர்த்தி மற்றும் பந்து வீச்சாளர் சந்தீப்
வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இன்றைய
போட்டி ஒத்தி வைக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, அனைத்து வீரர்களும் பயோ- பபிளில் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஸ்கேன் எடுக்க பயோ-
பபிள்ளில் இருந்து வருண் சக்கரவர்த்தி வெளியே சென்றுள்ளார். அப்போது கொரோனா
தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வருண் மற்றும் சந்தீப் ஆகியோரை தவிர்த்து பரிசோதனை செய்து கொண்ட மற்ற
கொல்கத்தா அணி வீரர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், கொல்கத்தா அணியைச் சேர்ந்த மற்ற வீரர்கள், அணி நிர்வாகிகள்,
உதவியாளர்கள் என அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலிலும், ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கிய 2020
ஐபிஎல் சீசனில் வீரர்களுக்கு கொரோனா பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
இந்நிலையில் இன்றைய போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

UPDATE: IPL reschedules today's #KKRvRCB match after two KKR players test positive. #VIVOIPL

Details - https://t.co/vwTHC8DkS7 pic.twitter.com/xzcD8aijQ0
— IndianPremierLeague (@IPL) May 3, 2021

மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு என 6 நகரங்களில்,
பயோ-பபிள் நடைமுறைக்கு உட்பட்டு, பாதுகாப்பான முறையில் நடப்பு ஐபிஎல் சீசன்
நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, 5 போட்டிகளில்
வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடைசி இரண்டு சீசனில் தொடர்ந்து ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற கொல்கத்தா அணிக்கு, இந்த ஆண்டு ப்ளே-ஆஃப் செல்வதில் சிக்கல் ஏற்படுள்ளது. இயன் மோர்கன் தலைமயிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இனி விளையாட
இருக்கும் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால், கொரோனா சிக்கல்களில் இருந்து
மீண்டு வந்து வெற்றிகளை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா அணி உள்ளது.