கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது. இந்த கேலோ இந்தியா விளையாட்டூ போட்டிகளில் தமிழ்நாடு மாநிலம் சார்பாக கூடைப்பந்து, கால்பந்து கபடி, கோ-கோ, வாலிபால், ஹாக்கி ஆகிய விளையாட்டூகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே இப்போட்டிகளில் தமிழ்நாடு அணி கலந்துகொள்வதற்காக தேர்வு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு போட்டிகள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்ட விபரங்களுடன் நடத்தப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் அந்தந்த விளையாட்டு வீரா்/ வீராங்கனைகளுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்தில் கலந்துகொள்ளலாம் இப்போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் 01.01.2005 அன்று அல்லது அதற்கு பின்னரோ பிறந்து இருக்க வேண்டும். 1.ஆதார் அட்டை அல்லது பாஸ்போர்ட், 2.பள்ளிக் கல்விச் சான்றிதழ் (SSLC /10 ஆம் வகுப்பு) 3.பிறப்புச் சான்றிதழ் ( குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் ஜனவரி 1,2013 அன்று அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டது) அவணங்கள் கொண்டூவந்தால் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் இப்போட்டிகளில் கலந்துக் கொள்பவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்பட மாட்டாது. எனவே மேற்கண்ட போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர் /வீராங்கனைகள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறவும் மற்றும் இது தொடர்பாக இதர விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ 7401703485 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விபரம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.சி.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.