உலக கை மல்யுத்தப் போட்டியில் கேரள பெண் உதவி ஆய்வாளர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார்.


உதவி ஆய்வாளர் மினி ராஜு 2018-ஆம் ஆண்டு கேரள போலீஸ் சங்கம் ஏற்பாடு செய்த மாவட்ட அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் கடைசி நேரத்தில் நுழைந்து வெற்றி பெற்றார், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.


சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற உலக கை மல்யுத்தப் போட்டியில் அவர் கலந்துக்கொண்டு இரட்டை தங்க பதக்கம் வென்றார். இந்த நிகழ்வின் வேறொரு அம்சம் என்னவென்றால், அவர் உலக விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற 43 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார். மேலும் இந்த போட்டியில் மொத்தம் 13 பதக்கங்களை வென்றனர்.


அதில்  மூன்று தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம்  சர்வதேச அளவில்லான கை மல்யுத்த போட்டியில் இத்தனை பதக்கங்கள் வென்றது இதுவே முதல் முறையாகும், இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமையாகும்.  


13 பதக்கங்களில் எட்டு பதக்கங்கள் கேரளாவைச் சேர்ந்த கை மல்யுத்த வீரர்களால் வென்றவை.  மினி ராஜூ கூறுகையில் “ஒவ்வொரு ஆண்டும், இந்தியா 40-45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை போட்டிக்கு அனுப்பி, ஒன்று அல்லது இரண்டு பதக்கங்களுடன் திரும்பி வருவார்கள். இவ்வளவு பதக்கங்களை வெல்வது இதுவே முதல்முறை. மேலும், 1979-க்குப் பிறகு, இந்த நிகழ்வில் நாட்டிற்காக இரட்டை தங்கம் வென்ற முதல் நபர் நான்தான்," என தெரிவித்தார்.


மினி ராஜு, கை மல்யுத்த போட்டியில்  நுழைவதற்கு முன்பு, மாநில அளவிலான தடகள வீரராக இருந்தார், அவர் 100 மற்றும் 200 மீட்டர் ஹீட்ஸ் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றார். அவர் 2001 இல் காவல்துறையில் சேர்ந்தார். காவல் துறைக்கு வந்தால் கூட அவர் தொடர்ந்து தடகள போட்டியில் கலந்துகொண்டார். இருப்பினும், 2008-ஆம் ஆண்டில் ஒரு விபத்தின்  காரணமாக அவரது காலில் உள்ள தசைநார் பாதிக்கப்பட்டு அவரது தடகள வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது. 


2018-ஆம் ஆண்டில், கேரள காவல்துறை சங்கத்தின் கோழிக்கோடு மாவட்டப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கை மல்யுத்தப் போட்டியைப் பார்க்கச் சென்றபோது, ​​அந்த நிகழ்வில் பங்கேற்க அவர் முடிவு செய்தார், மேலும் "விளையாட்டில் தொடர்ந்து நான் பங்கேற்றதன் காரணமாக அங்கு வெற்றி பெறத் தேவையான பலம் எனக்கு இருந்தது" என மினி ராஜு குறிப்பிட்டார்.  


மேலும் “அதன்பின், நான் மாவட்ட அளவிலான கை மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றேன், அங்கு நான் பல அனுபவமிக்க எதிரிகளை தோற்கடித்து, மாவட்டத்தில் சாம்பியன் மற்றும் வலிமையான பெண்ணாக உருவெடுத்தேன்.  எனது குடும்பம், மற்றும் எனது கணவரின் ஆதரவால் இவை அனைத்தும் சாத்தியமானது. அவர்தான் எனக்கு உந்து சக்தி. அவர் என்னை காலை 5 மணிக்கு ஜிம்மிற்கு அழைத்துச் செல்கிறார், எங்கள் பணி முடிந்த பின்  மீண்டும் மாலையில் உடற்பயிற்சிக்கு ஜிம்மிற்கு அழைத்து செல்வார். அவரும் என்னுடன் பயிற்சி மேற்கொண்டார்" என கூறினார்.


விளையாட்டில் நுழைந்த நான்கு ஆண்டுகளில், அக்டோபர் 14-23 வரை துருக்கியில் நடைபெற்ற உலக கை மல்யுத்தப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தினார், அங்கு இந்தியா 13 பதக்கங்களை வென்றது.  மினி ராஜூவின் கணவரும் பயிற்சி மேற்கொண்டாலும் அவர் ASI, விளையாட்டு நிகழ்வில் பங்கேற்கவில்லை. ராஜுவின் பயிற்சியாளர் ரோஷித், அவர் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மை நடத்துகிறார், மேலும் அவர் விளையாட்டின் தேசிய அளவிலான நடுவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.