ஸ்பெயினில் நடைபெற்ற ஜூனியர் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றயைர் பிரிவில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சங்கர், நேற்று நடைபெற்ற ஃபைனலில் சீன தைபேவின் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 14-21, 20-22 என்ற செட் கணக்கில் இவர் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், பைனல் வரை முன்னேறிய அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
முன்னதாக, டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.
134 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் டி காக் அரஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வநடிக ரசோவ் ரன் எதுவும் எடுக்காமல் அரஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் கேப்டன் பவுமா மற்றும் மார்க்கரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுமா 10 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து மார்க்கரம் மற்றும் டேவிட் மில்லர் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இதன்காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 10 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்து.
கடைசி 10 ஓவர்களில் தென்னாப்பிரிக்க வெற்றிக்கு 96 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது மார்க்கரம் அதிரடி காட்ட தொடங்கினார். அவர் 38 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் மில்லர் மார்க்கரமிற்கு பக்க பலமாக இருந்தார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஆட்டத்தின் 16 வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா மார்க்கரம் விக்கெட்டை எடுத்தார். எய்டன் மார்க்கரம் 41 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்தில் இருந்த மில்லர் அதிரடி காட்ட தொடங்கினார். இவர் குறிப்பாக ஆட்டத்தின் 18 வது ஓவரில் 12 சிக்சர்கள் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய மில்லர் வேகமாக ரன்களை சேர்த்தார். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது.
ஆட்டத்தின் கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்து மில்லர் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 46 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் விளாசி 59 ரன்களுடன் இருந்தார். சூப்பர் 12 சுற்றில் இந்தியா அணி பெரும் முதல் தோல்வி இதுவாகும். இந்தியா அணி அடுத்து பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாவே அணிகளுடன் மோத உள்ளது.