மேலும் அறிய

Year Ender 2024 : தோனியின் வைட் பால் முதல் கோலியின் நோ பால் வரை.. ஐபிஎல் 2024ல் நடந்த சர்ச்சைகள்

Flashback IPL 2024 : ஐபிஎல் 2024 தொடரில் நடந்த முக்கிய சர்ச்சைகளின் விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்

உலகின் புகழ்ப்பெற்ற கிரிக்கெட் லீக்கான இந்தியன் பீரிமியர் லீக்கின் 17 சீசன் இந்த மார்ச் 22 தொடங்கி மே 26 வரை நடந்தது. உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் ஐபிஎல் தொடர் எந்த அளவிற்கு பிரபலமாக உள்ளதோ அதே அளவிற்கு சர்ச்சைகளும் ஐபிஎல் தொடரை சுற்றி உலா வரும், அந்த வகையில் இந்த ஆண்டு தொடரில் நடந்த முக்கிய சர்ச்சைகளை இந்த தொகுப்பில் காண்போம். 

விராட் கோலியின் நோ பால் சர்ச்சை:

ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் 2024 இன் 36வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா அணி  222 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய ஆர்சிபி அணியிக் விராட் கோலி 6 பந்துகளில் 17 எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இந்த விக்கெட் பெரும் சர்ச்சையானது, ஹர்ஷித் ராணா வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் விராட் ஒரு பெரிய ஷாட் ஆட கிரீஸை விட்டு வெளியேறினார், ஆனால் பந்து ஃபுல் டாஸ்சாக வந்த பந்தை கோஹ்லி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பந்து கோஹ்லியின் பேட்டில் பட்டதும், பந்தின் உயரம் அவரது இடுப்புக்கு மேல் தெளிவாக இருந்தது. ஆனால் கோஹ்லி கிரீஸுக்குள் இருந்திருந்தால், பந்து அவரது இடுப்புக்கு கீழே இருந்திருக்கும் என்று ஹாக் ஐ அமைப்பு கண்டறிந்தது. இந்த முடிவால் கோபமடைந்த கோஹ்லி, மைதானத்தில் நடுவருடன் சண்டையிட்டார், இந்த நடத்தைக்காக கோஹ்லிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சஞ்சு சாம்சனின் கேட்ச்

ஐபிஎல் 2024 இன் 56வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி 221 ரன்கள் எடுத்திருந்தது, இலக்கைத் தூரத்திய  ராஜஸ்தான் அணி  கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியால் போட்டியை வெல்லும் என்று எதிர்ப்ப்பார்க்கப்பட்டது.  ராஜஸ்தான் அணியின் 16வது ஓவரில்  சாம்சன் ஒரு பெரிய ஷாட்டை ஆட முயன்றார், ஆனால் அவர் ஷே ஹோப்பிடம் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து அவுட்டானர். ரீப்ளேக்கள் பலமுறை பார்க்கப்பட்டன, ஆனால் ஹோப்பின் கால் எல்லைக் கோட்டைத் தொடவில்லை என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனால் சாம்சனுக்கு அவுட் கொடுக்கப்பட்டது, முக்கியமான நேரத்தில் வந்த சாம்சனின் விக்கெட் காரணமாக ராஜஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் தோல்வியுற்றது. 

சஞ்சீவ் கோயங்காவின் கோபம்

ஐபிஎல் 2024 இன் 57வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. எல்எஸ்ஜி பிளேஆஃப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்பினால், அவர்கள் SRH க்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் போட்டியின் முடிவு முற்றிலும் எதிர்மாறாக இருந்தது, ஏனெனில் ஹைதராபாத் 62 பந்துகள் மீதமுள்ள நிலையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே. எல் ராகுல் மீது கோபமடைந்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடமும் பேசிய வீடியோ வைரலானது. சஞ்சீவ் திட்டுவதை ராகுல் குழந்தை போல் கேட்டுக் கொண்டே இருந்த வீடியோ வைரலானது. இதனால், கிரிக்கெட் வல்லுநர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் வரம்பிற்குள் இருக்குமாறு  அறிவுறுத்தியிருந்தனர்.

இதையும் படிங்க: Top 10 Athletes: இந்த வருஷம் நமக்கு தான்.. பாண்டியா முதல் மைக் டைசன் வரை.. டாப் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியல் 

எம் .எஸ் தோனி வைட் பால் சர்ச்சை: 

ஐபிஎல் 2024-ன் 34வது லீக் போட்டி சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது, இப்போட்டியின்  18வது ஓவரில் மொஹ்சின் கான் பந்துவீசினார். களத்தில் எம்.எஸ் தோனி ஒரு பந்தை  தவறவிட்டார், பந்து தோனியின் பேட்டுக்கு அடியில் சென்றாலும் மைதான நடுவரால் வைட் என அறிவிக்கப்பட்டது. இதனால் மொஹ்சினின் லைன் மற்றும் லென்த் மோசமடைந்தது, அதன் காரணமாக அவரது ஓவரில் நிறைய ரன்கள் எடுக்கப்பட்டன. இது அப்போது பெரிய சர்ச்சையாக பேசப்பட்டது. 

கேலி செய்யப்பட்ட ஹர்திக்:

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சீசன் தொடக்க ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவை  மக்கள்  கூட்டத்தினர் விநோதமான முறையில் வரவேற்றனர், அவர்கள் டாஸின் போது பாண்டியாவை கேலி செய்தனர். இது  ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியம் மற்றும் மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் தொடர்ந்து நடந்தது. ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது அணியில் உள்ள சில வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருந்ததால் இவ்வாறு பாண்டியாவிடம் நடந்துக்கொண்டது சர்ச்சையானது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget