IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடந்து வருகிறது. சீனியர் வீரர்கள், அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆகியோர் மீது முக்கியத்துவம் அளித்து வழக்கமாக ஏலத்தில் களமிறங்கும் சென்னை அணி நிர்வாகம் இந்த முறை இளம் வீரர்களை குறிவைத்தே களமிறங்கியது. 

Continues below advertisement

14.20 கோடி ரூபாய்:

சென்னை அணி அகில் ஹுசைனை 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்த நிலையில், இளம் வீரரான அன்கேப்ட் வீரர் பிரசாந்த் வீரை சென்னை அணி ரூபாய் 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 20 வயதே ஆன இந்த இளம் வீரர் ஆல்ரவுண்டர் ஆவார். இதன் காரணமாகவே இவரை இந்த தொகைக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

யார் இந்த பிரசாந்த் வீர்?

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஆவார். உத்தரபிரேதசத்தின் அமேதியில் பிறந்த இவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் எதிரொலியாக இவரை அணியில் ஏலத்தில் எடுத்தனர். சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி தொடரிலும், உத்தரபிரதேச உள்ளூர் தொடரிலும் சிறப்பாக ஆடி அசத்தினார். 

Continues below advertisement

உத்தரபிரதேச டி20 லீக் தொடரில் 155.34 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார். சையத் முஷ்டாக் அலி தொடரில் 169.69 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார். சென்னை அணி மிடில் ஆர்டரில் இவர் பலமாக இருப்பார் என்று கருதுப்படுகிறது. பந்துவீச்சிலும் இவர் பக்கபலமாக இருப்பார் என்று கருதப்படுகிறது.

பலமான பேட்டிங்:

சென்னை அணியின் பேட்டிங்கில் ஏற்கனவே ருதுராஜ், சாம்சன், ஷிவம் துபே, தோனி, ஆயுஷ் மாத்ரே, ப்ரெவிஸ் உள்ள நிலையில் இளம் வீரர் பிரசாந்த் வீர் தற்போது கூடுதல் பலமாக இருப்பார் என்று கருதப்படுகிறது. 

கடந்த சீசனில் வெளிநாட்டு வீரர்களையும், அனுபவ வீரர்களையும் நம்பி சென்னை அணி களமிறங்கிய நிலையில் அவர்களால் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. கான்வே, அஸ்வின், தீபக் ஹுடா, ராகுல் திரிபாதி ஆகிய வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை. 

இளம் பட்டாளம்:

இதையடுத்து, சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் பரிசோதனை முயற்சியாக அணிக்கு உள்ளே கொண்டு வரப்பட்ட ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், கம்போஜ் ஆகிய இளம் வீரர்கள் சிறப்பாக ஆடியதால் சென்னை அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மினி ஏலத்தில் களமிறங்கியுள்ளது. 

இதன் எதிரொலியாகவே ரூபாய் 14.20 கோடி கொடுத்து பிரசாந்த் வீரையும், விக்கெட் கீப்பர் கார்த்திக் சர்மாவை ரூபாய் 14.20 கோடியும் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. மேலும் பந்துவீச்சில் கலீல் அகமது, அன்சுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், முகேஷ் செளத்ரி, பிரசாந்த் வீர், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் உள்ளனர்.