ஐபிஎல் மெகா ஏலத்தில் மிகவும் எதிர்பார்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் டு ப்ளெஸியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஆர்சிபி அணி 7 கோடி ரூபாய்க்கு வாங்கி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.
ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், இன்று தொடங்கிய மேகா ஏலத்தில் டு ப்ளெஸி சென்னை அணியில் நிச்சயம் எடுக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், டு ப்ளெஸி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறார்.
கடந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் பெற முக்கிய காரணமாக இருந்தவர். ரிட்டென்சன் மூலம் சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். அவரை தக்கவைக்கவில்லை.
இருப்பினும், இந்த ஏலத்தில் அவரை மீண்டும் அணியில் எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டும் எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயத்தில், பாப் டுப்ளிசிசை மும்பை அணி, பெங்களூர் அணி, ஹைதரபாத் அணி புதியதாக களமிறங்கியுள்ள லக்னோ, குஜராத் அணிகளும் வாங்க ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது ஆரம்ப விலை 2 கோடி இருந்தது. தற்போது, அவரை 7 கோடிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2018 - 21 இல் சிஎஸ்கே பட்டத்தை வென்றதில் டு பிளெசிஸ் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருந்தார். தென்னாப்பிரிக்க வீரர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தார். அவரது 633 ரன்கள், சக சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் எண்ணிக்கைக்கு இரண்டு ரன்கள் மட்டுமே குறைவாக இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் பாப் டுப்ளிசிஸ் 16 போட்டிகளில் ஆடி 16 போட்டிகளிலும் பேட்டிங் செய்து 633 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக 95 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தார். அந்த தொடரில் மட்டும் பாப் டுப்ளிசிஸ் 6 அரைசதங்களை அடித்துள்ளார். இறுதிப்போட்டியில் 86 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக வெளிநாட்டு வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர் டு பிளெசிஸ். 37 வயதான அவர் விளையாடிய 92 போட்டிகளில் 35.33 சராசரியில் 2721 ரன்கள் குவித்துள்ளார்.
பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில், அந்த அணிக்கு யார் கேப்டனாக நியமிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், சென்னை அணிக்கு தூணாக இருந்த டு பிளிசஸை தற்போது வாங்கியிருப்பதால், அவரே கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கோலியும் அவரை நியமிக்க ஆதரவும், ஆலோசனையும் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதுவரை கோப்பையை வாங்காத ஆர்சிபி இம்முறை, டுபிளிசஸ் தலைமையில், கூட கோலியின் பலத்துடன் வாங்க வேண்டும் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தற்போது வந்த தகவல் படி, கோலியுடன் டு பிளிசஸ் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்