மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன்  பாப் டுப்ளிசிஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.


இதன்படி, ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கை ஜோஸ் பட்லரும், ஜெய்ஷ்வாலும் தொடங்கினர். கடந்த போட்டியில் ஜொலிக்காத ஜெய்ஷ்வால் இந்த போட்டியிலும் வில்லி பந்தில் 4 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல்லும், ஜோஸ் பட்லரும் நிதானமாக ஆடினர். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களே எடுத்திருந்தது.




ஆகாஷ்தீப் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் பட்லர் அளித்த கேட்ச் வாய்ப்பை ஆகாஷ்தீப் கோட்டைவிட்டார். அதே ஓவரில் ஜோஸ் பட்லர் அளித்த மற்றொரு கேட்ச் வாய்ப்பை டேவிட் வில்லி நழுவவிட்டார். இதற்கு அடுத்த பந்திலே பட்லர் மிகப்பெரிய சிக்ஸ் ஒன்றை விளாசினார். இதற்கு பிறகு, பட்லர்- தேவ்தத் படிக்கல் ஜோடி அதிரடியாக ஆடத்தொடங்கியது. இதனால், ராஜஸ்தான் ஸ்கோர் மளமளவென ஏறத்தொடங்கியது. அப்போது, ஹர்ஷல் படேல் பந்தில் தேவ்தத் படிக்கல் அளித்த கடினமான கேட்ச்சை விராட்கோலி பிடித்தார். இதனால், படிக்கல் 27 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 39 பந்தில் அவுட்டானார்.


பின்னர், களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஹசரங்காவின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 8 ரன்களில் அவுட்டானார். அடுத்து ஜோடி சேர்ந்த பட்லரும், ஹெட்மயரும் அதிரடியாக ஆட முயற்சித்தனர். ஆனால், பெங்களூர் வீரர்கள் சிறப்பாக வீசியதால் அவர்களால் ரன்களை அடிக்க முடியவில்லை. 18 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியினர் எடுத்தனர். இதனால், கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வீரர்கள் அதிரடியாக ஆடத்தொடங்கினார்.




முகமது சிராஜின் 19வது ஓவரின் கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார். கடைசியில் ஆகாஷ்தீப் வீசிய பந்தில் பட்லர் அதிரடியாக ஆடியதால் ராஜஸ்தான் அணி 150 ரன்களை கடந்தது. ஆகாஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் உள்பட 23 ரன்களை எடுத்தனர். இதனால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை எடுத்தது. பட்லர் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6 சிக்ஸருடன் 70 ரன்கள் எடுத்தார். ஹெட்மயர் 31 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்தார்.  பெங்களூர் அணியில் ஹர்ஷல் படேல் மட்டும் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண