RR vs DC Match Prediction: ஐபிஎல் 2023 தொடரின் 11 வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இன்று மாலை 4 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது உள்ளூர் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த வார தொடக்கத்தில் பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இருப்பினும் இந்த போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இதுவரை மோதிக்கொண்ட புள்ளி விவரங்களை கீழே காணலாம். 

புள்ளி விவரங்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் இரு அணிகளும் தலா 13 வெற்றிகளுடன் இருக்கின்றன. 

கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் இரண்டு முறை மோதியது. இதில், இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றிபெற்றன. 

  • விளையாடிய போட்டிகள் - 26
  • ராஜஸ்தான் ராயல்ஸ் வென்ற போட்டிகள் - 13
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் வென்ற போட்டிகளில் - 13
  • கைவிடப்பட்ட போட்டிகள் - 0
  • டை - 0

கவுகாத்தி மைதானம்:

கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் முதல்முறையாக இன்று சந்திக்கிறது. இதற்கு முன்னதாக இரு அணிகள் இந்த மைதானத்தில் இதுவரை சந்தித்தது கிடையாது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 5வது இடத்தில் இருக்கிறது. அதே வேளையில் டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் வெற்றிக்காக போராடும். 

கடந்த 5 ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டிகள்:

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதியபோது  மிட்செல் மார்ஷ் 62 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து டெல்லி அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார். இந்த சூழலில் இன்றைய போட்டியில் மார்ஷ் இடம்பெறமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. 

அதேபோல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லரும் காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்.

பேட்டிங் ரெக்கார்ட்:

பேட்ஸ்மேன் போட்டிகள் ரன்கள் ஸ்ட்ரைக் ரேட் அதிகப்பட்ச தனிநபர் ஸ்கோர்
அஜிங்க்யா ரஹானே (RR, DC) 15 611 133.40 105*
ரிஷப் பந்த் (DC) 9 357 170.00 78*
வீரேந்திர சேவாக் (DC) 11 295 164.80 75

பந்துவீச்சு ரெக்கார்ட்:

பந்து வீச்சாளர் போட்டிகள் விக்கெட்டுகள் சராசரி பெஸ்ட்
அமித் மிஸ்ரா (DC) 11 20 16.00 3/17
பர்வீஸ் மஹரூப் (DC) 6 11 12.63 3/34
ககிசோ ரபாடா (DC) 5 9 17.33 3/35