ஐபிஎல் போட்டியென்றால் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமே இருக்காது. அது களத்திற்கு உள்ளேயும் சரி களத்திற்கு வெளியேயும் சரி. அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. ரிக்கி பாண்டிங்கின் மகன் விராட் கோலியை சந்தித்த தருணம் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது.


ரிக்கி தாமஸ் பாண்டிங்,(பிறப்பு 19 டிசம்பர் 1974), ஆஸ்திரேலிய முன்னாள்  சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற கேப்டன். ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி அதன் 'பொற்காலத்தில்'; டெஸ்ட் கிரிக்கெட்டில் 2004 மற்றும் 2011 க்கு இடையில் மற்றும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2002 மற்றும் 2011 க்கு இடையில். அவர் ஒரு சிறப்பு வலது கை பேட்ஸ்மேன், ஒரு சிறந்த ஸ்லிப் / க்ளோஸ் கேச்சிங் பீல்டர், அதே போல் அவ்வப்போது பந்து வீச்சாளர்


ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2 உலகக் கோப்பைகளை வென்று கிரிக்கெட் கண்ட மகத்தான கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஓய்வுக்குப்பின் பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வரும் அவர் ஒவ்வொரு தொடருக்கு முன்பாக கணிக்கும் கணிப்புகள் சில தருணங்களில் அப்படியே நடந்தேறி வருகிறது.


அப்படிப்பட்ட ஜாம்பவானின் மகன் ஃப்ளெட்சர் வில்லியம் பாண்டிங் அண்மையில் விராட் கோலியை சந்தித்த தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சமூக வலைதள பக்கங்களில் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ரிக்கியும், கோலியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள அப்போது அங்கிருந்த ப்ளெட்சர் வில்லியம் சிறு குழந்தைக்கே உரித்தான தயக்கத்துடன் நிற்க கோலியும், ரிக்கியும் கலகலப்பாகப் பேசிக் கொள்கிறார்கள்.






ரிஷப் பண்ட்டுடன் கால்பந்து:








ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் மகனுடன் கால்பந்து விளையாடும் வீடியோ வேகமாக வைரலானது. இது தொடர்பான வீடியோவை டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது. அதில் ரிக்கி பாண்டிங்கின் மகன் ஃபிளட்சர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கால்பந்து விளையாடும் காட்சிகள் இடம்பெற்றன. அத்துடன் கடைசியில் ரிஷப் பண்ட் ஃபிளட்சரை தூக்கும் வகையில் காட்சிகளும் இருந்தன.