ஐபிஎல் 2023 சீசனின் 20வது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் சின்னசாமி மைதானத்தில் மோத இருக்கிறது. இந்த இரண்டு அணிகளின் புள்ளி பட்டியல் விவரங்களை கீழே காணலாம். 


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அபார வெற்றியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த சீசனை தொடங்கியது. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தனர். 


அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இந்தாண்டு மோசமான பார்முடன் தொடங்கியது. இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4லிலும் தோல்வியை சந்தித்தது. எனவே, இன்றைய போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முயற்சியில் களமிறங்கும். 


நேருக்கு நேர்:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக பெங்களூர் அணி 18 முறையும், டெல்லி கேபிடல்ஸ் அணி 10 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டிக்கு மட்டும் முடிவு இல்லை. 


கடந்த 2020 ஆண்டு சீசனில் இருந்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது இல்லை. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடைசியாக விளையாடிய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியே வெற்றிபெற்றுள்ளது. 



  • ஒட்டு மொத்தமாக விளையாடிய போட்டிகள் - 29

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வென்ற போட்டிகள் - 18

  • டெல்லி கேப்பிட்டல்ஸ் வென்ற போட்டிகள் - 10

  • முடிவு இல்லாத போட்டிகள் - 1


பெங்களூர் மைதானம் யாருக்கு சாதகம்? 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. பெங்களூர் மைதானத்தில் இந்த இரு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பெங்களூர் அணி 6 முறையும், டெல்லி அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதில் ஒன்று முடிவு இல்லாமல் முடிந்தது. 



  • பெங்களூர் மைதானத்தில் விளையாடிய போட்டிகள் - 11

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வென்ற போட்டிகள் - 6

  • டெல்லி கேபிடல்ஸ் வென்ற போட்டிகள் - 4

  • முடிவு இல்லாத போட்டிகள் - 1


புள்ளி விவரங்கள்:



  • பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள்: 949 (விராட் கோலி)

  • டெல்லி அணிக்காக அதிக ரன்கள்: 184 (பிரித்வி ஷா)

  • பெங்களூர் அணிக்காக அதிக விக்கெட்டுகள்: 10 (முகமது சிராஜ்)

  • டெல்லி அணிக்காக அதிக விக்கெட்டுகள்: 7 (அன்ரிச் நார்ட்ஜே)

  • பெங்களூர் அணிக்காக அதிக கேட்ச்கள்: 15 (விராட் கோலி)

  • டெல்லி அணிக்காக அதிக கேட்சுகள்: 5 (டேவிட் வார்னர்)


கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:


 விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், கர்ன் சர்மா, முகமது சிராஜ்.


டெல்லி கேபிடல்ஸ் அணி:


டேவிட் வார்னர் (கேப்டன்), பிருத்வி ஷா, மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், ரோவ்மேன் பவல், அக்சர் படேல், லலித் யாதவ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முகேஷ் குமார்.