PBKS vs KKR, IPL 2023: பஞ்சாப் மற்றும் கொல்கத்தா போட்டி மழையால் தடைபட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

192 ரன்கள் டார்கெட்:

 

ஐ.பி.எல். போட்டித்தொடர் நேற்று தொடங்கியது. போட்டித்தொடரின் இரண்டாவது போட்டியில், இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு சீசன்களில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியும் மொஹாலியில் மோதிக் கொண்டன. இந்த தொடரின் இரண்டாவது போட்டியான இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ராணா பந்து வீச முடிவு செய்துள்ளார். இதன்படி, பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் இந்த தொடரில் கொல்கத்தா 'A' பிரிவுலும் பஞ்சாப் 'B' பிரிவிலும் இடம் பெற்றுள்ளது. 
 

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியின் சார்பில் ராஜபக்‌ஷா அரைசதம் விளாசி இருந்தார். இறுதியில் அதிரடி காட்டிய சாம் கரண் 26 ரன்கள் குவித்து இருந்தார். கொல்கத்தா அணியின் சார்பில், டிம் சவுதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

 

மழை குறுக்கீடு:

 

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பம் முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை மந்தீப் சிங் மற்றும் குப்ராஸ் ஜோடி தொடங்கியது. இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் மந்தீப் சிங்கையும் இறுதிப் பந்தில் அனுகுல் ராயையும்  வெளியேற்றினார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் ரன் குவிப்பிலும் கொல்கத்தா அணி சிறப்பாக ஈடுபட்டது.  ஆனால் 15 ஓவரை வீசிய சாம் கரண் அதிரடியாக ஆடிவந்த ரஸல் விக்கெட்டை வீழ்த்த, போட்டி பஞ்சாப் வசம் வந்தது. 15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்து இருந்தது. 

 

பஞ்சாப் வெற்றி:

 

போட்டியின் முடிவை தீர்மானிக்கும் கடைசி நான்கு ஓவர்கள் வீசப்படுவதற்கு முன்னர் மழை பெய்ததால் போட்டி மேற்கொண்டு நடத்தப்படவில்லை. இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.