பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத்  டைட்டன்ஸ் அணிகள் இன்று பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் இரவு 7 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும், 

குஜராத் டைட்டன்ஸ் அணி தனது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான வெற்றிகளுடன் தொடங்கியது. இருப்பினும், தங்களது கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது. 

பஞ்சாப் அணியை பொறுத்தவரை, தங்களது தொடக்க இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக வென்றது. ஆனால்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தது. 

இந்தநிலையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை நேருக்கு நேர் மோதிய விவரங்களை பார்க்கலாம். 

நேருக்கு நேர்:

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இவர்கள் மோதிய இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

  • விளையாடிய போட்டிகள் - 2
  • பஞ்சாப் கிங்ஸ் வென்ற போட்டிகள் - 1
  • குஜராத் டைட்டன்ஸ் வென்ற போட்டிகள் - 1

மொஹாலி மைதானம்: 

பஞ்சாப் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இந்தப் போட்டியை மொஹாலியின் பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம் நடத்தவுள்ளது. முந்தைய ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் மகாராஷ்டிராவில் இரண்டு முறை சந்தித்தன. பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் அவர்கள் சந்திக்கும் முதல் போட்டி இன்று நடக்கிறது. 

தகவல் பஞ்சாப் குஜராத்
விளையாடிய மொத்தப் போட்டி 2 2
 வெற்றி  1 1
தோல்வி 1 1
அதிக மதிப்பெண் 189 190
குறைந்த மதிப்பெண் 145 143

கடந்த போட்டிகள் விவரம்: 

DATE வெற்றி வித்தியாச வெற்றி இடம்
மே 3, 2022 பஞ்சாப் 8 விக்கெட்டுகள் DY பாட்டீல் ஸ்டேடியம், நவி மும்பை
ஏப்ரல் 8, 2022 குஜராத் 6 விக்கெட்டுகள் பிரபோர்ன் ஸ்டேடியம், மும்பை

கணிக்கப்பட்ட இரு அணி விவரங்கள்:

பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):

ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், மேத்யூ ஷார்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி):

விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்