இந்திய கிரிக்கெட்டில் மட்டும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென தனி வரலாற்றை சகாப்தத்தை ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் மகேந்திர சிங் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்தார். தோனி கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தோனி உருவாக்க முக்கிய காரணம் அவரது சிக்ஸர்தான். தோனியின் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்கள் அவரை தல தோனி என அழைத்து வருகின்றனர்.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான காலகட்டங்களில் அவர் அடித்த சிக்ஸர்களை ஹெலிஹாப்டர் சிக்ஸர் என அழைக்கப்பட்டது. தோனியின் சிக்ஸர் அடிக்கும் திறன் மட்டும் இல்லாமல் தோனியின் ஹேர் ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பே இருந்தது. இந்த சிக்ஸர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல எடுக்கப்பட்ட ரன்னை தோனி சிக்ஸர் விளாசிதான் கோப்பையில் இந்தியாவின் பெயரை பொறிக்க வைத்தார்.
தோனியின் மீதான காதல் கதை
இதனாலே தோனியின் சிக்ஸர் மீது அவரது ரசிகர்களுக்கு தனி காதல் கதை உள்ளது. சர்வதேச போட்டிகளிலேயே தோனி சிறந்த ஃபினிஷர் என பெயர் எடுத்த பின்னர், ஐபிஎல் போட்டியிலும் தனது ஃபினிஷர் ரோலை சிறப்பாகவே செய்து வந்தார் தோனி. குறிப்பாக ரசிசர்கள் மத்தியில் தோனியின் சிக்ஸர் மீது இருக்கும் காதல் கதைக்காகவே மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வந்தனர். தோனி இதுவரை 239 சிக்ஸர்கள் பறக்கவிட்டு சென்னை அணி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இதனாலே கடந்த சில ஆண்டுகளாக இது தோனியின் கடைசி சீசன், கடைசி சீசன் என ஊடகங்களிலும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் இதற்கெல்லாம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த தோனி, சென்னை அணி ரசிகர்களுக்காக தான் சென்னையில் விளையாடுவேன் என தெரிவித்திருந்தார். இதற்காகவே கடந்த சீசன் விளையாடினார். கடந்த சீசனில் தோனி தலைமையில் சென்னை அணி கோப்பையை வென்றது.
இந்நிலையில் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னர் தோனி தனது முகநூல் பக்கத்தில், ”என்னால் காத்திருக்க முடியவில்லை. வரக்கூடிய புதிய சீசனில் புதிய அத்தியாத்தை தொடங்குகின்றேன். காத்திருங்கள்” என பொருள் படும்படி பதிவிட்டு இருந்தார். இது ரசிகர்களுக்கு தோனி மறைமுகமாக தெரிவிக்கும் ஓய்வு குறித்த அறிவிப்பு என கூறப்பட்டது.
இந்நிலையில் தோனிக்கு பதிலாக இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டாலும் தோனி சென்னை அணிக்காக விளையாடுவாரா, முதல் போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வி இப்போது வரை மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தோனியின் கடைசி சீசன் கடைசி சீசன் என சொல்லி வந்த நிலையில், தோனியின் கடைசி சீசன் இதுதான் என உறுதியாகிவிட்டது. இது தோனியின் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி இதுவரை 250 ஐபிஎல் போட்டிகளில் விளாயாடியுள்ளார்.