ஐ.பி.எல். தொடரில் இன்று  வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சூர்யகுமார்ன் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச முடிவு செய்தார்.  இந்த போட்டியில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜுன் அறிமுகமானார். 


தனது இன்னிங்ஸை வழக்கம் போல் தொடங்கிய கொல்கத்தா அணிக்கு இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பின்னர் களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் பந்துகளை சிக்ஸருக்கு விளாசுவதில் குறியாக இருந்தார். பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா களமிறங்கி சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 


இதற்கிடையில், 23 பந்தில் தனது அரைசதத்தினை கடந்த வெங்கடேஷ் ஐயரை மும்பை இந்தியன்ஸ் அணியால் வீழ்த்தவே முடியவில்லை. மும்பை அணியின் கேப்டன் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதனால், அவர் மைதனம் முழுவதும் சிக்ஸர்களை விளாசினார். இதனால் கொல்கத்தா அணியின் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கட்டத்தில் 200 ரன்களை எளிதில் கடந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட போது, களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரந்த வெங்கடேஷ் ஐயர் 49 பந்தில் தனது முதல் ஐபிஎல் சதத்தினை எட்டினார். ஆனால் சதம் விளாசிய அடுத்த இரண்டுவது பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 51 பந்தில் 104 ரன்கள் சேர்த்த அவர் 6 பவுண்டரியும் 9 சிக்சரும் விளாசினார். அதன் பின்னர் ரிங்கு சிங்குடன் கை கோர்த்த ரஸ்ஸல் தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த கொல்கத்தா அணி மிகவும் சவாலான ரன்னை எட்டியது. 


இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் சேர்த்துள்ளது. கொல்கத்தா சார்பில் வெங்கடேஷ் ஐயர் 104 ரன்களும், ரிங்கு சிங் 18 ரன்களும், ரஸ்ஸல் 21 ரன்களும்  சேர்த்தனர். மும்பை அணி சார்பில் ஹிர்திக் இரண்டு விக்கெட்டுகளும், மெரிடித், சாவ்லா, க்ரீன், ஜன்சன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 


அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணி தொடக்கம் முதல் அதிரடியாக ஆடினர். குறிப்பாக களமிறங்கிய அனைவரும் சிக்ஸர்கள் பறக்க விட்டு மைதானத்தில் கூடி இருந்த தங்களது ரசிகர்களை குஷிப் படுத்தினர். இறுதியில் மும்பை அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மும்பை அணி சார்பில் இஷான் கிஷன் 58 ரன்களும், சூரய்குமார் யாதவ் 43 ரன்களும் விளாசினர்.