KKR Vs SRH, IPL 2024: ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்கும் தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணியை, சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் தொடரின் மூன்றாவது போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 


கொல்கத்தா - ஐதராபாத் மோதல்:


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. கொல்கத்தா அணி இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. அதேநேரம், ஐதராபாத் அணி ஒருமுறை கோப்பையை வசப்படுத்தியுள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசயிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் கண்டுகளிக்கலாம்.


பிளேயிங் லெவன்:


கொல்கத்தா: பில் சால்ட் , வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (C), ரின்கு சிங், நிதிஷ் ராணா, சுனில் நரேன். ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.


இம்பேக்ட் பிளேயர்ஸ்: சுயாஷ் சர்மா, மணீஷ் பாண்டே, வைபவ் அரோரா, ரகுவன்ஷி, குர்பாஸ்


ஐதராபாத்: மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்


இம்பேக்ட் பிளேயர்ஸ்: நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா அணி 16 முறையும், ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 205 ரன்களையும், குறைந்தபட்சமாக 101 ரன்களையும் எடுத்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 228 ரன்களையும், குறைந்தபட்சமாக 115 ரன்களையும் சேர்த்துள்ளது.


ஈடன் கார்டன் மைதானம் எப்படி?


வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் மைதானம், எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதன் காரணமாக கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.