IPL Records: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மிகச்சிறந்த 5 இன்னிங்ஸ்கள் பற்றி இங்கு காணலாம். 


தோனியின் பேட்டிங் என்றாலே ஹெலிகாப்டர் ஷாட் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். பார்ப்பவர்கள் அனைவரையும் கிரிக்கெட் விளையாட தூண்டும் வகையில் மிகச் சிறப்பான சிக்ஸர்களை பறக்கவிடும் தல தோனி, தான் களத்தில் இருக்கும் வரை எதிரணிகளை மிரட்டியுள்ளார் எனலாம். மிகச்சிறந்த ஃபினிஷரான தோனியின் டாப் ஐந்து இன்னிங்ஸ்கள் குறித்து பார்க்கலாம். 


1. 20 பந்தில் 51 ரன்கள் 


2012இல் மும்பைக்கும் சென்னைக்கும் இடையில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெல்ல தோனியின் அதிரடியான இன்னிங்ஸ் தான் காரணம். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில்  20 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசி அதகளப்படுத்தியிருந்தார். அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 255. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


2. 32 பந்தில் 64 ரன்கள்


2016ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தொடரில் தோனி புனே அணியில் இடம் பிடித்து இருந்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், 32 பந்தில் 4 பவுண்டரி 5 சிக்ஸர் பறக்கவிட்டு 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி காட்டிய தோனி அந்த போட்டியில் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். 


3. 40 பந்தில் 70 ரன்கள் 


2011ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 22 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்தது. அதன் பின்னர் சஹாவுடன் இணைந்த தோனி, தனது அணி கௌரவமான ஸ்கோரை எட்டவைத்தது. இறுதியில் சென்னை அணி 128 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் சென்னை அணி தோற்றாலும், தோனி 40 பந்தில் 70 ரன்கள் விளாசி அதகளப்படுத்தி இருந்தார். 




4. 34 பந்தில் 70 ரன்கள்


பெங்களூ அணிக்கு எதிராக 2018ல் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி  தோனியின் ஃபினிஷிங் ஸ்டைலில் வெற்றி பெற்றது. 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை சென்னை அணி அணி சேஸ் செய்தது. வழக்கம் போல் மிடில் ஆர்டரில் களமிறங்கிய தோனி, அட்டகாசமாக விளையாடினார், அவர் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தார். 20வது ஓவரின் 4வது பந்தினை சிக்ஸருக்கு பறக்கவிட்டு மிரட்டலான வெற்றியை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


5. 46 பந்தில் 75 ரன்கள்


2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோனியின் ருத்ரதாண்டவ ஆட்டம் அவரது ஃபிட்னஸ் குறித்த பலரது விமர்சனங்களுக்குமான பேரடியாக விழுந்தது. 46 பந்துகளை எதிர் கொண்ட தோனி 4 பவுண்டரி 4 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன் இந்த போட்டியில், ராஜஸ்தான் ராயல் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.