ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போட்டித் தொடரின் 16வது ஆட்டத்தில் அருண்ஜெட்லி மைதானத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் 8வது ஓவரை இளம் சுழற்பந்துவீச்சாளர் ஹிரித்திக் வீசினார். அப்போது அவர் அந்த ஓவரின் 4வது பந்தை நோ பாலாக வீசினார். இதையடுத்து, ப்ரீ ஹிட் வழங்கப்பட்டது. ப்ரீ ஹிட்டாக கிடைத்த பந்தை டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் எதிர்கொண்டார்.


வலது கையில் பேட் செய்த வார்னர்:


ப்ரீஹிட் பந்தில் ரன் அவுட் தவிர மற்ற முறைகளில் ஆட்டமிழந்தால் அவுட்டாக கருதப்படாது என்பதால் இடது கை வீரரான வார்னர் வலது கையில் பேட்டிங் செய்தார். அந்த பந்தை அவர் விளாசினாலும் அதில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இடது கையில் அதிரடியில் மிரட்டும் வார்னர் வலது கையில் பேட் செய்த காட்சி ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியது. 


முன்னதாக டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி அணிக்கு டேவிட் வார்னரும் பிரித்விஷாவும் தொடக்க வீரராக களமிறங்கினர்.


பொறுப்பான கேப்டன்:


களமிறங்கியது முதல் அதிரடியாக ஆட முயற்சித்த பிரித்விஷா 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவர் 15 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த மணிஷ்பாண்டே அதிரடி காட்ட முயற்சித்தார். ஆனால், அவரது அதிரடி நிலைக்கவில்லை. 18 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


யஷ்துல் 2 ரன்னிலும், பாவெல் 4 ரன்னிலும், லலித் யாதவ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் கேப்டன் வார்னர் மட்டும் பொறுப்புடன் நிதானமாக ஆடி வருகிறார். மும்பை அணிக்காக சுழல் தாக்குதல் நடத்தி வரும் பியூஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


கேப்டனாக மட்டுமின்றி வீரராகவும் தன்வசம் பல்வேறு சாதனைகளை வைத்துள்ள டேவிட் வார்னர் இதுவரை 166 ஐ.பி.எல். போட்டிகளில்  ஆடி6 ஆயிரத்து 85 ரன்களை எடுத்துள்ளார். அதில் 57 அரைசதங்கள் அடங்கும். 4 சதங்களும் அடங்கும். ஒட்டுமொத்த ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள், அதிக அரைசதங்கள், அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் டாப் 3 இடங்களுக்குள்ளே வார்னர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போட்டியில் பொறப்புடன் ஆடி வரும் டேவிட் வார்னர் அரைசதம் விளாசிய டேவிட் வார்னர் ஐ.பி.எல். போட்டிகளில் 600 பவுண்டரி விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.  


மேலும் படிக்க: Faf du Plessis Fined: இனி இப்படி செஞ்சீங்கனா பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்க முடியாது - டூ ப்ள்ஸியை எச்சரித்த ஐபிஎல் நிர்வாகம்..!


மேலும் படிக்க: Harshal Patel Mankad: வாரி வழங்கிய ரன்கள்.. மன்கட் முயற்சி.. தன்னம்பிக்கையை இழந்துவிட்டாரா ஹர்ஷல்..?