மேலும் அறிய

Praful Hinge: 19 வருடத்தில் முதன்முறை! ராஜஸ்தானை அலறவிட்ட பிரபுல் ஹிஞ்சே - யார் இந்த சன்ரைசர்ஸ் ஸ்டார்?

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று 4 விக்கெட்டை வீழ்த்திய சன்ரைசர்ஸ் வீரர் பிரபுல் ஹிஞ்சே புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதியது. இந்த தொடரைப் பொறுத்தமட்டில் ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சன்ரைசர்ஸ் அணி வெற்றி தோல்வி என்றே ஆடி வருகிறது.

217 ரன்கள் இலக்கு:

இதனால், இந்த போட்டி தொடங்கும் முன்பு அனைவரும் ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்றே கருதினர். ஏனென்றால், இந்த தொடர் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் ஆர்சிபி அணியையே ராஜஸ்தான் அணி எளிதாக வென்றதாலும், சூர்யவன்ஷியின் அபாரமான பேட்டிங்காலும் ரசிகர்கள் பலரும் அவ்வாறு கருதினர்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தின் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்றாகவே அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் பிராஃபுல் ஹிஞ்ச். மொத்த ராஜஸ்தான் டாப் ஆர்டரையும் சிதைத்து 57 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸை வெற்றி பெற வைத்தார். ராஜஸ்தான் அணிக்கு சன்ரைசர்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்தபோது, அதை எளிதாக ராஜஸ்தான் எட்டிவிடும் என்றே பலரும் கருதினர்.

முதல் ஓவரிலே ஆட்டத்தை முடித்த பிரபுல்:

ஆனால், ஆட்டத்தை முதல் ஓவரிலே பிரபுல் ஹிஞ்ச் சன்ரைசர்ஸ் வசம் கொண்டு வந்துவிட்டார். முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிய பிரபுல் ஹிஞ்சே முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்திலே அபாயகரமான சூர்யவன்ஷி அடித்து ஆட முயற்சித்து இஷான் கிஷனிடம் அவுட்டானார். 

4 விக்கெட்:

அடுத்து அபாயகரமான துருவ் ஜுரலை அதே ஓவரின் நான்காவது பந்தில் போல்டாக்கினார். பின்னர், அதே ஓவரின் கடைசி பந்தில் ப்ரெட்டோரியசையும் அவுட்டாக்க அந்த ஓவரில் 1 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்ததுடன் அங்கேயே ஆட்டத்தையும் ராஜஸ்தான் பறிகொடுத்தது. அடுத்து தான் வீசிய அடுத்த ஓவரில்  ராஜஸ்தான் கேப்டன் ரியன் பராக்கை 4 ரன்னில் அவுட்டாக்கினார்.

19 வருடத்தில் முதன்முறை:

9 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்த ராஜஸ்தான் அணி கடைசியில் 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தானின் வெற்றியைப் பறித்ததில் பிரபுல் ஹிஞ்சே பங்கு மிக முக்கியமானது. 19 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரிலே 3 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் இவரே ஆவார்.

30 லட்சம் ரூபாய்:

சூர்யவன்ஷி, துருவ் ஜுரல், ப்ரெட்டோரியஸ், ரியான் பராக் என 4 பேரை அவுட்டாக்கிய அவர் 4 ஓவர்களில் 34 ரன்கள் விட்டு்க்கொடுத்து அபாரமாக பந்துவீசினார். இவர் விதர்பாவைச் சேர்ந்தவர். 24 வயதே ஆன இவர் உமேஷ் யாதவ் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோரால் உத்வேகம் பெற்றவர். நேற்றைய போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் மொத்த ராஜஸ்தான் டாப் ஆர்டரையும் சிதைத்து சன்ரைசர்ஸ்க்கு அபார வெற்றியைப் பெற்றுத் தந்து பலரது கவனத்தையும் பெற்றுள்ளார். இவரை சன்ரைசர்ஸ் 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

இவர் மட்டுமின்றி நேற்று அறிமுகமான மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஷகிப் ஹுசைன் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி சன்ரைசர்ஸின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிற்கு குட் பை சொல்லப்போகும் மும்பை இந்தியன்ஸ்?
Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவிற்கு குட் பை சொல்லப்போகும் மும்பை இந்தியன்ஸ்?
Surya Kumar Yadav: அப்பா ஆனார் சூர்யகுமார் யாதவ்! ‘குட்டி இளவரசி’ வருகையால் உற்சாகத்தில் SKY குடும்பம்!
Surya Kumar Yadav: அப்பா ஆனார் சூர்யகுமார் யாதவ்! ‘குட்டி இளவரசி’ வருகையால் உற்சாகத்தில் SKY குடும்பம்!
IPL Final: ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி இடமாற்றம்.. அதிருப்தியில் கர்நாடக கிரிக்கெட் சங்கம்
IPL Final: ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி இடமாற்றம்.. அதிருப்தியில் கர்நாடக கிரிக்கெட் சங்கம்
சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ்!வைபவ் சூர்யவன்ஷி 'குழந்தை தொழிலாளர்'..தடை கோரி புகார் - பின்னணி என்ன?
சிக்கலில் ராஜஸ்தான் ராயல்ஸ்!வைபவ் சூர்யவன்ஷி 'குழந்தை தொழிலாளர்'..தடை கோரி புகார் - பின்னணி என்ன?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay ADMK: கட்சி தாவலா? மாற்றமா? வாக்-அவுட்டா? அதிமுக MLAக்கள் இன்றைய முடிவு என்ன? - CM விஜய் ஹாப்பி
கட்சி தாவலா? மாற்றமா? வாக்-அவுட்டா? அதிமுக MLAக்கள் இன்றைய முடிவு என்ன? - CM விஜய் ஹாப்பி
TN Assembly :கோட்டையை தக்கவைப்பாரா விஜய்? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வரலாற்றில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு
TN Assembly :கோட்டையை தக்கவைப்பாரா விஜய்? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: வரலாற்றில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு
CM Vijay: நம்பிக்கை வாக்கெடுப்பு.. 140+ MLA-க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு? சட்டப்பேரவையில் விஜய் சாதிப்பாரா?
CM Vijay: நம்பிக்கை வாக்கெடுப்பு.. 140+ MLA-க்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவு? சட்டப்பேரவையில் விஜய் சாதிப்பாரா?
Gold Tariff: காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
CM Vijay: முதலமைச்சர் விஜய் - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடக்காதது ஏன்? அடம்பிடிப்பது யார்?
Iran Vs America: “மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
“மீண்டும் தாக்கப்பட்டால்...“ அமெரிக்காவிற்கு ஈரானின் அணு ஆயுத வார்னிங்; இது டேஞ்சரா இருக்கே.!
Vanni Arasu:
Vanni Arasu: "ஏற்கவே முடியாது.." முதலமைச்சர் விஜய் செயலால் விசிக எம்எல்ஏ ஆவேசம் - எதற்காக?
Rahul Gandhi: 'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
'இளைஞர்களுக்கு எதிரான குற்றம்'; மத்திய அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி; எதற்கு தெரியுமா.?
Embed widget