CSK vs MI: இந்த சீசனே சரியில்ல.. முடிவுக்கு வந்த மும்பை ஆட்டம்.. ஹர்திக் பாண்ட்யா புலம்பல்
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஐபிஎல் தொடரின் 19வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக திணறி வருகிறது.

2026ம் ஆண்டு ஐபிஎல் தொடர் எங்களுக்கு சரியாக அமையவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வந்த மும்பை போராட்டம்
மார்ச் 28ம் தேதி தொடங்கி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஐபிஎல் தொடரின் 19வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக திணறி வருகிறது. அதேபோல் சென்னை அணியும் முட்டிமோதி வருகிறது. ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளாக அறியப்படும் இவ்விரு அணிகளும் சரியாக விளையாடாதது ரசிகர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இப்படியான நிலையில் சென்னையில் நேற்று நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. அந்த அணி 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோற்றுள்ளது. கிட்டதட்ட மும்பை அணியின் பயணம் முடிவுக்கு வந்து விட்டது. குறைந்தப்பட்சம் 8 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும். மீதமுள்ள 5 போட்டிகளில் மும்பை ஜெயித்தாலும் மீதமுள்ள அணிகளின் நிலையைப் பொறுத்தே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா இல்லையா என்பது தெரிய வரும்.
இந்த சீசனே சரியில்ல - ஹர்திக் பாண்ட்யா
போட்டி முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, “மிகவும் முக்கியமான தருணத்தில் அணியால் ஒருங்கிணைந்து செயல்பட முடியவில்லை” என தெரிவித்தார். மேலும், இந்த போட்டியில் ஒரு கட்டத்தில், நாங்கள் 180-190 ரன்கள் எடுப்போம் என்று எதிர்பார்த்தோம். 10 ஓவர்களுக்குப் பிறகு எங்களால் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஆட்டத்தை சரியாகவும் முடிக்க முடியவில்லை. சென்னை அணி புத்திசாலித்தனமாக விளையாடி எங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டார்கள்” என ஹர்திக் பாண்ட்யா கூறினார்.
தொடர்ந்து அவரிடம் இந்த நாள் மும்பைக்கு எதிர்பார்த்த இரவாக அமையவில்லையா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்ட்யா, “தாங்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இந்த சீசன் அமைந்துவிட்டது. இந்த இரவு மட்டும் கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் சிறந்த கணிப்பும் செயலாக்கமும் தேவைபந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் இன்னும் எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களை ஆட்டமிழக்கச் செய்ய நீங்கள் சில அனல் பறக்கும் பந்துகளை வீசியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் எங்களிடம் இருந்த சிறந்த பந்து வீச்சு வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தினோம்” என தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்



















