CSK Playoff Chance:ரசிகர்களே! ப்ளே ஆஃப் போகுமா சென்னை? சாத்தியமா? அசாத்தியமா?
IPL Play Offs: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு நாளுக்கு நாள் சவாலாகி வருகிறது.

ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. இதில் ஐபிஎல் தொடக்க காலம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் படுமோசமாக ஆடி வருகிறது.
ப்ளே ஆஃப் செல்லுமா சென்னை?
இந்த சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு இந்த தொடரில் எப்படி உள்ளது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 8 போட்டிகளில் ஆடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்து 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. சென்னை அணிக்கு இன்னும் 6 போட்டிகள் எஞ்சியுள்ளது. இந்த 6 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த முடியும். மேலும், சென்னை அணியின் ரன்ரேட் -0.121 என்ற மோசமான நிலையிலே உள்ளது.
சென்னை அணிக்கு அடுத்தடுத்து போட்டி மும்பை, டெல்லி, லக்னோ, சன்ரைசர்ஸ் ஹைதரபாத், குஜராத் ஆகிய அணிகளுடன் மோத உள்ளது. இதில் லக்னோ அணியுடன் இரு முறை மோதுகிறது.
14 புள்ளிகள் வேண்டும்:
டெல்லி, சன்ரைசர்ஸ், குஜராத் அணிகள் பலமாக உள்ளது. குறைந்தது 5 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அடிப்படை தகுதியைப் பெற முடியும். எஞ்சியுள்ள 6 போட்டிகளில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தால் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு தவிடுபொடியாகிவிடும்.
சென்னை அணியைப் பொறுத்தமட்டில் சாம்சன், ருதுராஜ், ப்ரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, சர்பராஸ், ஷிவம் துபே என சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் ஒரு அணியாக அவர்கள் சிறப்பாக ஆடாதது அணிக்கு பின்னடைவாக உள்ளது. தோனி இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
பந்துவீச்சு:
கம்போஜ் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். மற்ற பந்துவீச்சாளர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அடுத்தடுத்து வரும் போட்டிகளில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், மற்ற அணிகளின் வெற்றி வாய்ப்பை பொறுத்தே சென்னையின் ப்ளே ஆஃப் வாய்ப்பு அமைந்துள்ளது.
சென்னை அணியின் ஆட்டம் கடந்த சீசனிலே ரசிகர்களுக்கு கவலை அளித்த நிலையில், இந்த முறை ஏலத்திற்கு பிறகு இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த அணியாக களமிறங்கியுள்ளது. ஆனாலும், அணியாக அவர்கள் இதுவரை ஒற்றுமையாக ஆடாததால் வெற்றி வாய்ப்பு சவாலாகி வருகிறது. தற்போதைய சூழலில், பஞ்சாப் 13 மற்றும் ஆர்சிபி 12 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பிற்கு மிக அருகில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதரபாத், ராஜஸ்தான், குஜராத் அணிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பிற்கு மல்லு கட்டி வருகின்றனர்.
Virat Kohli: விராட் கோலி இன்னும் எவ்ளோ நாள் IPL ஆடுவார்? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
ட்ரெண்டிங் செய்திகள்



















