IPL 2025 SRH vs DC: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 10வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடக்கிறது. 

இந்த போட்டியில் மிகப்பெரிய பேட்டிங் பட்டாளம் கொண்ட சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி மீண்டும் ரன் வேட்டை நடத்துமா? டெல்லி அணி அவர்களை கட்டுப்படுத்துமா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதரபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருப்பதால் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். 

ப்ளேயிங் லெவன்:

டெல்லி அணியில் கேப்டன் அக்ஷர் படேல் தலைமையில் ஜேக் ப்ரெசர் மெக்குர்க், பாப் டுப்ளிசிஸ், அபிஷேக் போரல், ஸ்டப்ஸ்ட், விப்ராஜ் நிகாம், ஸ்டார்க், குல்தீப்யாதவ், மோகித் சர்மா, முகேஷ்குமார் ஆகியோர் களமிறங்குகின்றனர். 

ஐதரபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அனிகெத் வர்மா, அபினவ் மனோகர்,கம்மின்ஸ், அன்சாரி, ஹர்ஷல் படேல், முகமது ஷமி களமிறங்குகின்றனர். 

ஐதரபாத்தை கட்டுப்படுத்துமா டெல்லி?

இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அனிகெத் வர்மா, அபினவ் மனோகர் ஆகியோர் அதிரடி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீண்ட பேட்டிங் பட்டாளத்தை டெல்லி பந்துவீச்சாளர்கள் மோகித் சர்மா, முகேஷ் குமார், ஸ்டார்க், குல்தீப் யாதவ் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேசமயம், கடந்த 2 சீசன்களாக ரன்மழை பொழிந்து வரும் ஐதராபாத் அணி நிர்ணயிக்கும் இலக்கை ஜேக் ப்ரெசர், ஃபாப் டுப்ளிசிஸ், அபிஷேக் போரல், ராகுல், அக்ஷர் படல், ஸ்டப்ஸ் பட்டாளம் எப்படி எட்டிப்பிடிக்கப்போகிறது? என்பதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியின் முடிவு இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறத் துடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.