IPL 2025 RCB vs RR:

ஐபிஎல் தொடரில் இன்று சின்னசாமி மைதானத்தில் நடந்து வரும் போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 

கோலி அதிரடி:

இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய பில்சால்ட் - விராட் கோலி ஜோடி அதிரடியாக ஆடியது. வழக்கமாக சால்ட் அதிரடியாக ஆடுவார். ஆனால், இந்த முறை விராட் கோலி அதிரடியாக ஆட சால்ட் நிதானமாக தொடங்கி அதிரடி காட்ட முயற்சித்தார். ஆனால், அதிரடியாக ஆடுவதற்கு முன்பே பில் சால்ட் ஹசரங்கா6 சுழலில் அவுட்டானார். அவர் 23 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

கோலி, படிக்கல் அரைசதம்:

இதையடுத்து, ஜோடி சேர்ந்த விராட் கோலி - தேவ்தத் படிக்கல் ஜோடி அசத்தலாக ஆடியது. இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். பவுண்டரி, சிக்ஸர்களாக இருவரும் விளாச பெங்களூர் ஸ்கோர் எகிறியது. விராட் கோலி பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாச படிக்கல்லும் பக்கபலமாக பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். அசத்தலாக ஆடிய விராட் கோலி தன்னுடைய  68வது ஐபிஎல் அரைசதத்தை விளாசினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல்லும் அரைசதம் விளாசினார்.

206 ரன்கள் டார்கெட்:

இதனால், ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல்ரன் ரேட் இருந்தது. இந்த நிலையில் இந்த ஜோடியை ஜோஃப்ரா ஆர்ச்சர் பிரித்தார்.  அவரது வேகத்தில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 70 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அரைசதம் விளாசிய படிக்கல்லும் அவுட்டானார். அவர் 27 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 206 ரன்கள் ராஜஸ்தானுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொந்த மைதானத்தில் ஆடிய 4வது போட்டியில் தற்போதுதான் இயல்பான பேட்டிங்கிற்கு ஆர்சிபி அணி வந்துள்ளது.  

அடுத்து வந்த கேப்டன் ரஜத் படிதார் 1 ரன்னில் அவுட்டாக 5வது விக்கெட்டிற்கு டிம் டேவிட் - ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். இதனால், இவர்களது ரன்ரேட் தொடர்ந்து 10க்கும் மேலே இருந்தது.  சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 45 ரன்களை விட்டு்க்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர், ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.