சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பிரியன்ஷ் ஆர்யா - ப்ரப்சிம்ரன் சிங் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை தொடங்கினர்.
கொல்கத்தா அசத்தல் பவுலிங்:
ஆட்டத்தை தொடங்கிய ப்ரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடினார். அவருக்கு பிரப்சிம்ரனும் ஒத்துழைப்பு அளித்து அதிரடி காட்டினார். ஓவருக்கு 10 ரன்கள் வீதம் இவர்கள் அதிரடி காட்டிய நேரத்தில் இந்த ஜோடியை ஹர்ஷித் ராணா பிரியன்ஷ் ஆர்யா 12 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டானார். இது பஞ்சாப் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
இதையடுத்து, பஞ்சாப்பை ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தங்களது பந்துவீச்சால் கட்டுப்படுத்தினர். ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டான பிறகு ஜோஷ் இங்கிலிஷ் 2 ரன்னில் அவுட்டானார். 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பிரப்சிம்ரன் 15 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு ராணா பந்தில் அவுட்டானார்.
சீட்டுக்கட்டு போல சரிந்த விக்கெட்:
இதன்பின்பு, மீண்டும் சீட்டுக்கட்டுகள் போல பஞ்சாப் விக்கெட்டுகளை இழந்தது. இளம் வீரர் நேகல் வதேரா 10 ரன்களுக்கும், இந்த தொடர் முழவதும் சொதப்பி வரும் மேக்ஸ்வெல் வருண் சக்கரவர்த்தி சுழலில் 7 ரன்களுக்கும் அவுட்டானர். இதனால், பேட்டிங்கிலே இம்பேக்ட் வீரரை இறக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது.
இதையடுத்து, சுயான்ஷ் ஷெட்கே இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அவரும் 4 ரன்களில் அவுட்டாக, ஜான்சென் 1 ரன்னில் அவுட்டாக 88 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப். அந்த அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை ஷஷாங்க் சிங் ஏற்றார். இதனால், 100 ரன்களை பஞ்சாப் கடந்தது.
112 ரன்கள் டார்கெட்:
ஆனாலும், அவரையும் ஹர்ஷித் ராணா அவுட்டாக்கினார். ஷஷாங்க் சிங் 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு அவுட்டானார். கடைசியில் பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி கொல்கத்தா அணி ஆடி வருகிறது.