MI vs GT: சறுக்கிய மும்பை! முதலிடத்தில் குஜராத் டைடன்ஸ் KKR-ஐ தடுக்குமா CSK? பாயிண்ட்ஸ் டேபிள் விவரம்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு கொண்டு குஜராத் டைடன்ஸ் வந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் மும்பை அணி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைப்பெற்ற இந்தப்போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களுக்கு எடுத்தது. 156 ரன்கள் இலக்கை நோக்கிச் சென்ற ஜிடி அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஆனால் மழை ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பல மழை இடைவெளிகளுக்குப் பிறகு, ஜிடி இறுதியாக ஒரு ஓவரில் 15 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவர் த்ரில்லர்:
ராகுல் திவேதியா பேட் செய்தார். அந்த ஓவரின் முதல் பந்தையே ராகுல் திவேதியா பவுண்டரி அடித்தார் இதனால், 5 பந்துகளில் 11 ரன்கள் என்கிற நிலை இருந்தது. 2வது பந்தில் ஒரு ரன் எடுக்க கோட்ஸி கோட்ஸி 3வது பந்தில் சிக்ஸர் விளாச 3 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அடுத்த பந்தில் 1 ரன் எடுக்க அந்த பந்து நோ பாலாகவும் மாறியது. இதனால், 3 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஃப்ரி ஹ்ட் பந்தில் திவேதியா 1 ரன் எடுக்க 2 பந்தில் 1 ரன் தேவைப்பட்டது.
5வது பந்தில் கோட்ஸி அவுட்டாக 1 பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த பந்தில் அர்ஷத்கான் அடித்து ஓடிய பந்தை ரன் அவுட் செய்யாமல் விட்டதால் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சிஎஸ்கே-கேகேஆர் மோதல்:
இன்று நடைப்பெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இன்னும் நீடிக்கும் கொல்கத்தா அணிக்கு இந்தப்போட்டி முக்கியமான போட்டியாக உள்ளது. மறுப்பக்கம் சென்னை அணி இந்த சீசனில் வெளியேறி இருந்தாலும். அடுத்த சீசனுக்கான அணியை தயார்ப்படுத்தி வருகிறது. கொல்கத்தா அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல விடாமல் சென்னை அணி தடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட இந்த மோதலில் வெற்றி பெற்ற பிறகு, GT 11 ஆட்டங்களில் 16 புள்ளிகளுடன் (+0.793 NRR) புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மறுபுறம், MI 12 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் (+1.156 NRR) நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது.
தற்போது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் (+0.482) இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் (+0.376) மூன்றாவது இடத்திலும் உள்ளன.





















