Kuldeep Rinku: பளீர்..! மைதானத்திலேயே ரிங்கு சிங்கை அறைந்த குல்தீப் யாதவ் - சாதி ஆணவமா? வீடியோ வைரல்
Kuldeep slaps Rinku: கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை, டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kuldeep slaps Rinku: கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை மைதானத்தில் வைத்து அறைந்த குல்தீப் யாதவிற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரிங்கு சிங்கை அறைந்த குல்தீப் யாதவ்:
ஜாலியாகவா? பொழுதுபோக்காகவா? சாதி காரணமா? என பல கேள்விகளுடன், ரிங்கு சிங்கை மைதானத்தில் வைத்து அறைந்த குல்தீப் யாதவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வியுற்ற பிறகு, பொதுவெளியில் வைத்து இரண்டு முறை ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.
What the hell is giving Kuldeep Yadav confidence to slap Rinku like this in public ?
— Dharma Watch (@dharma_watch) April 29, 2025
After KL Rahul, Kuldeep is 2nd in fraud list. Never performed under pressure 🤡
Ban him @BCCI#ViratKohli #IPL2025 #IPL #KKRvsDC pic.twitter.com/7DVCn0B39l
முகம் மாறிய ரிங்கு சிங்
டெல்லி அணியை வீழ்தியதன் மூலம் நடப்பு சாம்பியான கொல்கத்தா தனது பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. இந்நிலையில், அந்த போட்டியின் முடிவில் டெல்லி மற்றும் கொல்கத்தா வீரர்கள் மைதானத்தில் கூடி பேசிக்கொண்டு இருந்தனர். குறிப்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வீரர்களான ரிங்கு சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஒருவரை ஒருவரை கிண்டலடித்து நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக குல்தீப் யாத, ரிங்கு சிங்கின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டார். இதனால் ஷாக் ஆன அவர் நடப்பது புரியாமல் கோபமாகி முறைத்துள்ளார். அதனை சற்றும் பொருட்படுத்தாத குல்தீப் சில வார்த்தைகளை கூறிவிட்டு, மீண்டும் ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைய அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.
கொந்தளிக்கும் நெட்டிசன்கள்:
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு போட்டியில் விளையாடும் வீரரை பொதுவெளியில் எப்படி ஒருவர் இப்படி தாக்கலாம்? என பலர் கேள்வி எழுப்புகின்றனர். அதேநேரம், சிலர் சகோதர்களுக்கு இடையேயான ஜாலியான சண்டை இது என குறிப்பிடுகின்றனர். அதை ஏற்க மறுக்கும் மற்றொரு தரப்பு, தன்னுடைய உயர்சாதி மனப்பான்மையை ரிங்கு சிங்கிடம் குல்தீப் யாதவ் வெளிப்படுத்தி இருப்பதாகவும் பெரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சம்பவத்தில் முழு விவரம் வெளியாக நிலையில், குல்தீப் யாதவ் மீது பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு, அவர் ரிங்கு சிங்கிடம் மன்னிப்பு கோரவும் வலியுறுத்தப்பட்டு வருகிறார்.
குல்தீப் யாதவிற்கு தடை:
முன்னதாக 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்ப்ஜன் சிங், பஞ்சாப் அணியுடனான போட்டியின் போது ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடிக்க, ஹர்பஜன் சிங் 11 போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடை விதித்தது. அதேபோன்று குல்தீப் யாதவிகும் தடை விதிக்க வேண்டும் என ரசிகர்கள் பிசிசிஐ-யை டிவிட்டரில் டேக் செய்து வலியுறுத்த வருகின்றனர். அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் 13 கோடி ரூபாய் சம்பளத்துடன் கொல்கத்தா அணிக்கும், குல்தீப் யாதவ் 13.25 கோடி ரூபாய் சம்பளத்துடன் டெல்லி அணிக்கும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.




















