GT VS PBKS: சாத்தியெடுத்த ஸ்ரேயாஸ்.. விழிபிதுங்கிய குஜராத்.. இமாலய இலக்கை வைத்த பஞ்சாப்
IPL GT VS PBKS: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

18வது ஐபிஎல் சீசனின் 5வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் அகமாதபாத் மைதானத்தில் விளையாடி வருகிறது.
ஏமாற்றம் தந்த பிரப்சிம்ரன்:
இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் களமிறங்கினர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார், மூன்றாவது வீரராக கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார்.
பிரியான்ஷ் அதிரடி:
பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தாலும் அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா தனது முதல் போட்டியில் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார், தனது இன்னிங்ஸ்சில் அவர் 7 பவுண்டரி 2 சிக்சர்களை பறக்கவிட்டார். மறுப்புறம் ஸ்ரேயஸ் தனது அதிரடியை தொடர்ந்தார்.
சொதப்பிய மிடில் ஆர்டர்:
மிடில் ஆர்டரில் விளையாடிய ஒமர்சாய் சிக்சருடன் தனது இன்னிங்ஸ்சை தொடங்கினாலும் 16 ரன்களில் சாய் கிஷோரிடம் விக்கெட்டை கொடுத்தார், அடுத்து வந்த மேக்ஸ்வெல் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது,அடுத்து வந்த மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் 20 ரன்களுக்கு நடையை கட்டினார்.
மிரட்டிய ஷஷாங்க்-ஸ்ரேயாஸ் ஐயர்:
ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷஷாங்க் பந்துகளை நாலப்புறமும் சிதறடித்தார், சுப்மன் கில் பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி ஓவர்களை கொடுத்த போதும் இவர்களின் அதிரடியை நிறுத்த முடியவில்லை. பிரசித் கிருஷ்ணாவின் ஒரே ஒவரில் 24 ரன்களை விளாசினார் ஸ்ரேயஸ் ஐயர்.
‘நீங்க மட்டும் தான் அடிப்பீங்களா நானும் அடிப்பேன் என்று ஷஷாங்க் சிங் கடைசி ஓவரில் 23 ரன்களை எடுத்தார். அவர் 16 பந்துகளில் 44 ரன்களை அடிக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணி 20 ஒவர்கள் முடிவில் 243 ரன்களை குவித்தது. குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோரை 3 விக்கெட்டையும், ரபாடா மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
244 என்கிற கடினமான இலக்கை குஜராத் அணி அடையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.