IPL 2025 DC vs LSG: பூரன், மிட்செல் மார்ஷ் சிக்ஸர் மழை; 210 ரன்களை எட்டுமா டெல்லி அணி?
IPL 2025 DC vs LSG: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோது போட்டி பற்றிய விவரன்

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் மார்ச், 22-ம் தேதி தொடங்கியது. ஏப்ரல், மே மாதம் முழுவதும் ஐ.பி.எல். கிரிக்கெட் பற்றிய பேச்சுகளை அதிகம் கேட்கலாம். கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா என்றே சொல்லலாம். 10 அணிகள், 74 போட்டிகள் என சுவாரஸ்யமான தருணங்களுடன் காத்திருக்கிறது தொடர்.
4-வது லீக் போட்டி - லக்மோ Vs டெல்லி அணி
ஐ.பி.எல். தொடரின் 4-வது லீக் போட்டி, ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது.
அதிரடியாக ஆரம்பித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
லக்னோ அணியிம் தொடக்க ஆட்டக்காரர்களான எய்டன் மார்க்ரம், மிட்சல் மார்ஷ் இருவரும் விளையாட்டை தொடங்கினர். எய்டன் மார்க்ரம் 15 ரன்னில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆனார். அதற்கு அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 0 மார்ஷ் கூட்டணி அதிரடியாக விளையாடி அணியின் ரன்னை உயர்த்தியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
மிட்சல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன் எடுத்தார். 6 பவுண்ட்ரிகள், 6 சிக்ஸர் அடித்து முகேஷ் குமார் பந்தில் அவுட் ஆனார். நிக்கோலஸ் பூரன் 30 பந்தில் 7 சிக்ஸர், 6 பவுண்ட்ரியுடன் 75 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் பூரனை போல்ட் செய்தார்.லக்னோ கேப்டன் ரிஷ்ப் பந்த ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
தொடக்கம் முதலே லக்னோ அணி அதிரடியாக விளையாடினாலும் 161-ரன்னுக்கு பிறகு, லக்னோ அணியின் பந்துவீச்சாளர்கள் சூப்பராக பந்துவீச தொடங்கினர். ஆயுஷ் பதோனி 4, ஷர்துல் தாக்குர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்திருந்தது லக்னோ. அடுத்த 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது.
ஆய்ஷ் போதானி ஷ்ர்துல் தாக்கூர், ஷபாஸ் அகமது எப அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது லக்னோ. இந்தப் போட்டியில் வெற்றி பெற டெல்லிக்கு 210 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர்.போட்டி, திக் திக் என்றே இருந்தது. மிட்சல் ஸ்டார்க், 4 ஓவரில் 42ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் தலா ஒரு விக்கெட், குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்திருந்தனர்.