பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. டாஸ் வென்ற கம்மின்ஸ்.. சென்னை அணியை துவம்சம் செய்யுமா ஹைதராபாத்?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஐபிஎல் தொடர் பரபரப்பான இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்குள் முன்னேற 10 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணி விவரம்: ஷேக் ரஷீத், ஆயுஷ் மத்ரே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா, டேவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, சாம் கரன், தீபக் ஹூடா
ஹைதராபாத் அணி விவரம்: அபிஷேக் சர்மா, இஷன் கிஷன், நிதிஷ் ரெட்டி, அனிகெத் வர்மா, கிளாசென், கமிந்து மென்டிஸ், முகமது ஷமி, ஸீஷன் அன்சாரி, ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல், பேட் கம்மின்ஸ்.
இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இன்றைய போட்டியில் தோல்வியுறும் அணி, நடப்பு தொடரில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
பேய்க்கும் பேய்க்கும் சண்டை:
வழக்கத்திற்கு மாறாக சென்னை அணி நடப்பு தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. சென்னை அணியில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மாற்று வீரர்கள் கூட வலுவாக இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. தோனி கேப்டன் பொறுப்பேற்ற பிறகும் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இம்மாதிரியான சூழலில், சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியே காணாத சென்னை அணி, தனது சாதனையை தொடருமா என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேநேரம், வழக்கமாக சென்னை அணியின் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்துவிடும். ஆனால், நடப்பு தொடரில் சென்னையின் மோசமான ஃபார்மால், ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க கூட ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















