சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் சென்னை அணி வீரர் எம்.எஸ் தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2025:
18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது, மொத்தம் 10 அணிகள் பங்குப்பெறும் இந்த தொடரி போட்டிகள் 13 மைதானங்களில் நடைப்பெற உள்ளது. முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
சென்னை vs மும்பை:
ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று(23.03.25) நடந்தது. இந்த போட்டியில் டாஸில் வெற்றிப்பெற்ற சென்னை அணி பந்துய் வீசியது, சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி வெற்றி:
156 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.1 ஓவரில் இலக்கை எட்டியது, கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ரவீந்திர ஆகியோர் அரைசதம் அடித்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இளம் வீரரை பாராட்டிய தோனி:
இந்த போட்டியில் என்னத்தான் மும்பை அணி தோற்று இருந்தாலும் அந்த அணியின் இளம் பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார், போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கி செல்லும் போது எம்.எஸ் தோனி விக்னேஷ் புத்தூரை அழைத்து பாராட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.
தீபக் சஹாரை செஞ்சு விட்ட தோனி:
கடந்த 7 சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடிய வேகபந்து வீச்சாளர் தீபக் சாஹர் இந்த முறை மும்பை அணியில் விளையாடுகிறார். இந்த நிலையில் தோனி பேட்டிங் செய்ய வரும் போது, எதோ கிண்டல் செய்யும் விதமாக பேசினார்.
இந்த நிலையில் போட்டி முடிந்து செல்லும் தோனியிடம் தீபக் சஹார் சிக்கினார், அப்போது தோனி அவரை விளையாட்டுத்தனமாக மட்டையால் அடிக்கப்போகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.