IPL 2025: மீண்டும் தொடங்கும் ஐபிஎல் ஆர்சிபிக்கு விழுந்த பேரிடி, இந்தியா வருவார்களா வெளிநாடு வீரர்கள்?
IPL 2025: எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 ஐ மீண்டும் தொடங்குவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கினாலும் மீதம் உள்ள போட்டிகளில் கலந்த்க்கொள்ள மாட்டார் என்று தெரிகிறது.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல்-2025 தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டது, இந்நிலையில் தற்போது போர் பதற்றம் தணிந்து ஐபிஎல் போட்டிகளை வருகிற மே 16 ஆம் தேதி மீண்டும் தொடங்கலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஹேசில்வுட் விலகல்:
எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 ஐ மீண்டும் தொடங்குவது குறித்து பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.ஏற்கனவே தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்ஹேசில்வுட் மே 3 அன்று சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியைக் காய காரணமாக தவறவிட்டார், மேலும் மே 9 அன்று லக்னோ அணிக்கு எதிரானப்போட்டியில் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நெருங்கி வருவதால், ஐபிஎல்லுக்காக அவர் இந்தியா திரும்புவது சாத்தியமில்லை என்று தெரிகிறது.
பக்கவாட்டு வலி மற்றும் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலக வேண்டி இருந்தது, காயத்தில் இருந்து மீள கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட ஹேசில்வுட், மீண்டும் தனது ஃபார்மை மீட்டெடுக்க ஐபிஎல்லில் கலந்துக்கொண்டு விளையாடினார்,
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தபோதிலும், கிரிக்கெட் ஆஸ்திரேலியா எச்சரிக்கையான அணுகுமுறையை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் தொடக்கத்தில் இங்கிலாந்தில் WTC-க்கு முந்தைய இறுதி கண்டிஷனிங் முகாம் திட்டமிடப்பட்டுள்ளதால், அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, மேலும் IPL-க்கு திரும்புவது தேவையற்றதாகத் தெரிகிறது. ஹேசில்வுட் களம் இறங்காமல் போனால் பெங்களூரு அணிக்கு பின்னடைவாக இருக்கும்.
கம்மின்ஸ்-ஹெட்-ஸ்டார்க் நிலை என்ன?
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் ஐபிஎல் பங்கேற்பு கேள்விக்குறியாக உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதால், பாட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஜூன் 11 ஆம் தேதி லார்ட்ஸில் தொடங்கும் WTC இறுதிப் போட்டிக்குத் தயாராவதற்கு ஆஸ்திரேலியாவிலேயே இருக்கத் தேர்வுசெய்யலாம். ஐந்தாவது இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் மிட்செல் ஸ்டார்க் நிலையும் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
நியூசிலாந்து அணியின் பெரும்பாலான வீரர்கள் ஏற்கனவே நாடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அதன் வீரர்களுக்கு மே 25 NOC காலக்கெடுவிற்கு அப்பால் தங்குவதை நீட்டிக்க முடியுமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதால், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காத்திருக்கும் சிக்கல்:
ஐபிஎல்இடைநீக்கம் செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறிய வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணியின் துணை ஊழியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான லாஜிஸ்டிக்ஸ் சவால் ஐபிஎல் மீண்டும் நடைப்பெறுமா என்னும் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கிறது.





















