ஐபிஎல் 2024ல் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் ஆறாவது தோல்வியை சந்தித்தது. 

தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் 2 புள்ளுகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 

முதல் இடத்தில் யார்..? 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 6 ஆட்டங்களில் 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

மற்ற அணிகள் எங்கே..? 

பஞ்சாப் கிங்ஸ் 6 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளது. மேலும்,  ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் 6 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. 

ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது. யார் அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் எடுத்துள்ளார் என்ற மொத்த பட்டியலை இங்கே பார்க்கலாம். 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

புள்ளிகள்

நிகர ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ்

6

5

1

0

10

0.767

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

5

4

1

0

8

1.688

3

சென்னை சூப்பர் கிங்ஸ்

6

4

2

0

8

0.726

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

6

4

2

0

8

0.502

5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

6

3

3

0

6

0.038

6

குஜராத் டைட்டன்ஸ்

6

3

3

0

6

-0.637

7

பஞ்சாப் கிங்ஸ்

6

2

4

0

4

-0.218

8

மும்பை இந்தியன்ஸ்

6

2

4

0

4

-0.234

9

டெல்லி கேப்பிடல்ஸ்

6

2

4

0

4

-0.975

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

7

1

6

0

2

-1.185

ஆரஞ்சு கேப்: 

1. விராட் கோலி (ஆர்சிபி): 7 இன்னிங்ஸ், 361 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 113*, சராசரி 72.20, ஸ்ட்ரைக் ரேட் 147.34, 1 சதம், 2 அரைசதம், 35 பவுண்டரிகள், 14 சிக்சர்கள்.
2. ரியான் பராக் (ஆர்ஆர்): 6 இன்னிங்ஸ், 284 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 84*, சராசரி 71.00, ஸ்ட்ரைக் ரேட் 155.19, 3 அரைசதம், 18 பவுண்டரிகள், 18 சிக்ஸர்கள்.
3. சஞ்சு சாம்சன் (ஆர்ஆர்): 6 இன்னிங்ஸ், 264 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 82*, சராசரி 66.00, ஸ்ட்ரைக் ரேட் 155.29, 3 அரைசதம், 25 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்.
4. ரோஹித் சர்மா (எம்ஐ): 6 இன்னிங்ஸ், 261 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 105*, சராசரி 52.20, ஸ்ட்ரைக் ரேட் 167.30, 1 சதம், 1 அரைசதம், 28 பவுண்டரிகள், 15 சிக்சர்கள்.
5. சுப்மன் கில் (ஜிடி): 6 இன்னிங்ஸ், 255 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 89*, சராசரி 51.00, ஸ்ட்ரைக் ரேட் 151.78, 2 அரைசதம், 19 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்.

பர்பிள் கேப்: 

1. யுஸ்வேந்திர சாஹல் (ஆர்ஆர்): 6 போட்டிகள், 22.0 ஓவர்கள், 132 பந்துகள், 11 விக்கெட்டுகள், சராசரி 14.82, 163 ரன்கள்.
2. ஜஸ்பிரித் பும்ரா (எம்ஐ): 6 போட்டிகள், 24.0 ஓவர்கள், 144 பந்துகள், 10 விக்கெட்டுகள், சராசரி 14.60, 146 ரன்கள், 1 5 விக்கெட்டுகள்.
3. முஸ்தாபிசுர் ரஹ்மான் (சிஎஸ்கே): 5 போட்டிகள், 20.0 ஓவர்கள், 120 பந்துகள், 10 விக்கெட்டுகள், சராசரி 18.30, 183 ரன்கள்.
4. பாட் கம்மின்ஸ் (எஸ்ஆர்ஹெச்): 6 போட்டிகள், 24.0 ஓவர்கள், 144 பந்துகள், 9 விக்கெட்டுகள், சராசரி 21.00, 189 ரன்கள்.
5. ககிசோ ரபாடா (பிபிகேஎஸ்): 6 போட்டிகள், 24.0 ஓவர்கள், 144 பந்துகள், 9 விக்கெட்டுகள், சராசரி 21.22, 191 ரன்கள்