17வது ஐபிஎல் தொடரில் இன்று அதாவது ஏப்ரல் 13ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
இந்த போட்டி சண்டிகரில் உள்ள முலான்பர் மைதானத்தில் நடைபெறுகின்றது. இந்த போட்டி பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டியில் தனது சொந்த மைதானத்தில் களமிறங்குகின்றது. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் மொத்தம் 26 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ராஜஸ்தான் அணி 15 போட்டிகளில் தனது வெற்றியை பதிவு செய்து இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பஞ்சாப் அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் நடப்பு தொடரில் கடைசியாக விளையாடிய லீக் போட்டிகளில் தோல்வியை கடைசி பந்தில் சந்தித்தது. இதனால் இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றியைப் பெற தீவிரமாக விளையாடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 223 ரன்களும் குறைந்தபட்சமாக 124 ரன்களும் எடுத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 223 ரன்களும் குறைந்தபட்சமாக 112 ரன்களும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் ப்ளேயிங் லெவன்
ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்): சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், தனுஷ் கோட்டியான், கேசவ் மகராஜ், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஜானி பேர்ஸ்டோவ், அதர்வா டைடே, பிரப்சிம்ரன் சிங், சாம் கர்ரன்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா